"அடி, உதை, குத்து.." WWE தோத்துடும் போலயே! டிவி விவாதத்தில் கட்டி புரண்டு சண்டை! பதற வைக்கும் வீடியோ
இஸ்லாமாபாத்: டிவி சேனல் விவாதம் ஒன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் திடீரென கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இப்போதெல்லாம் மாலை அல்லது இரவு நேரங்களில் பெரும்பாலான டிவி சேனல்களில் விவாதங்கள் நடக்கும். தினசரி ஒரு தலைப்பில் அரசியல்வாதிகள், வல்லுநர்களை அழைத்து அனைத்து டிவி சேனல்களும் விவாதித்து வருகிறது.

பல நேரங்களில் இந்த விவாதம் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும் கூட சில நேரங்களில் விவாதங்களில் மிக மோசமான சம்பவங்களும் அரங்கேறுகிறது. ஒரே நேரத்தில் பலர் கத்துவது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கவே செய்கிறது.
எல்லை மீறி தாக்குதல்: ஆனால், இங்கே அதையெல்லாம் தாண்டி எல்லை மீறி விட்டார்கள். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாகப் பரவும் வீடியோவில் விவாதத்தில் கலந்து கொண்ட இருவரும் அடிதடியில் இறங்கியுள்ளனர். நேர் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் திடீரென மாறி மாறி அடித்துக் கொண்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது பாகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது.
சமீபத்தில் அங்குள்ள உள்ள ஒரு தனியார் செய்தி சேனலில் நடந்த விவாதம்தான் கொடூரமான சண்டையாக மாறியது. அந்த விவாதத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேர் அப்சல் மார்வத் மற்றும் அங்கு இப்போது ஆளும் கட்சியாக உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியைச் சேர்ந்த அஃப்னானுல்லா கான் ஆகியோர் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
என்ன நடந்தது: அப்போது இம்ரான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்சல் மார்வத் திடீரென எழுந்து அஃப்னானுல்லா கானை ஓங்கி ஒரு அறை அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்னானுல்லா கானும் தாக்குதலில் இறங்கினார், இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். நிகழ்ச்சி நெறியாளர் அவர்கள் அமைதிப்படுத்த முயன்ற போதும் ஒன்றும் நடக்கவில்லை. இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
مرشد کو گالی دو گے تو مرید تو جواب دے گا ہی۔۔ اور جواب بنتا بھی ہے! کوئی تو ان کو انکی زبان میں سمجانے والا ہو!
— SB_Blog (@Bukhari2204) September 28, 2023
پکڑنا ہے یا چھوڑنا ہے 🤣😎 pic.twitter.com/i52eSgjrGL
உடனடியாக நிகழ்ச்சி இயக்குநர் உள்ளிட்ட அங்கிருந்த மற்றவர்கள் ஓடி வந்து இருவரையும் பிரித்துவிட்டனர். அவர்கள் தாக்கிக் கொண்டது மட்டுமின்றி மிகவும் மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பயன்படுத்தினர். இருவரது மைக்கும் கனெக்ட் ஆகி இருந்த நிலையில், அவர்கள் பேசிய மோசமான கருத்துகளும் டிவி சேனலில் ஒளிபரப்பானது. இந்த மோதல் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டாகும் வீடியோ: இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் நக்கலடித்து வருகின்றனர். டிவி நிகழ்ச்சியில் கூட ஒழுங்காக நடந்து கொள்ள முடியாத இவர்கள்தான் நமது நாட்டை வழிநடத்தப் போகிறார்களா எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த வீடியோவை ஷேர் செய்து தங்கள் கட்சிக்கு ஆதரவான கருத்துகளையும் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் இப்போது காபந்து அரசே இருக்கிறது. அங்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ரெடியாகி வருகிறது. அதில் இம்ரான் கான் மற்றும் ஷெரீப் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications