For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”கிளக்கோமா” கண் நோய்க்கு புதிய ‘நானோ’ மருந்து கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கண்நோய் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் நயாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து "கிளக்­கோமா" எனப்படும் கண் நோய்க்கு புதிய "நானோ" மருந்து கண்­டு­பி­டித்துள்ளனர்.

இதன்மூலம் கண்நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடி செலுத்திக் கொண்டால் போதுமானதாகும்.இதன்மூலம் கண்களின் பார்வைத்திறன் எந்த பக்கவிளைவுகளுக்கும் உள்ளாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து நுண்ணிய அள­வி­லான மில்­லி­யன் கணக்­கான மாத்­தி­ர­களைக் கொண்­டி­ருக்­கும்.இது கண்­வி­ழிக்­குள் ஊசி­மூ­லம் ஏற்­றப்­படும். இந்த நானோ மருந்து மெதுவாக ஆறு மாத காலத்­துக்கு மருந்தை வெளி­யி­டும்.

அதனால் தினமும் கண் சொட்டு மருந்தை விடவேண்டிய தில்லை. புதிய மருந்தைச் செலுத்­தும் முறையில் கண் பகுதியை உணர்வு இழக்­கச் செய்து, பின்னர் மேற்­கொள்­ளப்­படும். இதுவரை ஆறு நோயா­ளி­களி­டம் இந்த மருந்து பரிசோ­திக்­கப்­பட்­டுள்­ளது.

English summary
Scientists from Nan yang Technological University (NTU) and the Singapore Eye Research Institute (SERI) have jointly developed a new nano medicine that will allow glaucoma patients to do away with daily eye drops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X