அழகான மாணவிகளுக்கு ஆன்லைன் கிளாஸால் சிக்கல்.. மார்க் குறைஞ்சு போச்சாம்.! பெரிய பாகுபாடு! பகீர் ஆய்வு
சுவீடன்: ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெறும் நிலையில், புதிய ஆய்வு ஒன்று அதற்கு ஆதரவாக வெளியாகி உள்ளது.
கொரோனாவுக்கு முன்பு வரை, ஆன்லைன் கிளாஸ் என்றால் என்ன என யாருக்கும் தெரியாது. மாணவர்கள் அனைவரும் தினசரி பள்ளி, கல்லூரிக்கு நேரடியாகச் சென்றே பாடங்களைப் படித்தனர்.
ஆனால், கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதை போலவே கல்வி முறைகளையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

ஆன்லைன் வகுப்பு
கொரோனா தொடங்கிய பின்னர் பல மாதங்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடந்து வந்தது. கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்த பின்னரே மீண்டும் இப்போது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆய்வு
அப்படி ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சியாளரான அட்ரியன் மெஹிக் என்பவர் ஆன்லைன் வகுப்புகள் குறித்த ஆய்வை நடத்தினார். இதில் அங்குள்ள 300 மாணவ, மாணவிகள் கொரோனாவுக்கு முன்பும் பின்பும் பெற்ற மார்க் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாணவ, மாணவிகள் அதிக மார்க் பெறுவதில் அவர்களின் தோற்றம் உதவுகிறதா என்பதை அட்ரியன் மெஹிக் ஆய்வு செய்ய விரும்பினார்.

307 மாணவ மாணவிகள்
அதற்காகவே அவர் இந்த விரிவான ஆய்வை செய்தார். இந்த 307 மாணவர்களின் படங்களை 74 பேரிடம் கொடுத்து, அழகின் அடிப்படையில் அவர்களுக்கு 10 மதிப்பெண் வரை அளிக்கச் சொன்னார். இதில் மிகவும் வித்தியமான ஒன்றை அவர் கண்டுபிடித்தார். அதாவது வணிகம் மற்றும் பொருளாதாரம் போன்ற படிப்புகளில் மாணவிகளின் அழகு என்பது அவர்கள் பெறும் மார்கில் பிரதிபலிப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அழகு
அதேநேரம் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடங்களில் மாணவிகளின் அழகு மதிப்பெண்களில் எதிரொலிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடந்த போது மாணவிகளை ஆசிரியர்கள் நெரிசில் சந்திக்கும் வாய்ப்புகள் எதுவும் இல்லை என்பதால், இந்த காலகட்டத்தில் அழகான மாணவிகள் என்று கூறப்பட்டவர்களைப் பெறும் மார்க்குகள் கணிசமாகக் குறைந்துள்ளதையும் இந்த ஆய்வில் கண்டுபிடித்தனர்.

மாணவர்களுக்கு இல்லை
மாணவிகளுக்கு மட்டுமே இப்படி கிரேடுகள் மாறியுள்ளன. அதேநேரம் மாணவர்கள் மத்தியில் இந்த கிரேடு மாற்றம் காணப்படவில்லை. இதற்கான காரணத்தை அவர் தெளிவாக விளக்கவில்லை. இருப்பினும், பெரும்பாலான பேராசிரியர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர். தேர்வுகளில் மாணவிகள் மட்டும் அதிக பாரபட்சத்தை எதிர்கொள்வதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் இந்த ஆய்வை செய்த அட்ரியன் மெஹிக் தெரிவித்து உள்ளார்.

பாகுபாடு
இது தொடர்பாக அட்ரியன் மெஹிக் மேலும் கூறுகையில், "நேரடி வகுப்புகளில் மாணவ- மாணவிகளின் முக கவர்ச்சி அவர்களின் மார்க்குகளை பாதிக்கிறது. ஆன்லைன் கிளாஸ்களில் இந்த பாதிப்பு பெரியளவில் இல்லை. எனவே, நேரடி வகுப்புகள் நடைபெறும் போது, மாணவிகள் அதிகளவில் இந்த பாகுபாடுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

கிராமப்புற மாணவர்கள்
கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா இரண்டு ஆண்டுகளாக நம்மை வைத்துச் செய்துவிட்டது. கொரோனாவால் பல மாதங்களாகப் பள்ளி, கல்லூரிகள் முடங்கின. ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் அதிக பாகுபாடுகளை எதிர்கொள்ள நேர்வதும் மற்றொரு ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications