ரம்ஜான், பக்ரீத்துக்கு இனி அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை.. நியூயார்க் மேயர் அறிவிப்பு
நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள அரசுப் பள்ளிகளில் இனிமேல் பக்ரீத் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளுக்கு விடுமுறை விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது இதுதான் முதல் முறையாகும். அந்த வகையில் நியூயார்க் அரசுப் பள்ளிகள் புதிய வரலாறு படைத்துள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ வெளியிட்டுள்ளார். இருப்பினும் தீபாவளிக்கு விடுமுறை விட வேண்டும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவை அதுகுறித்து அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை. இதனால் இந்துக்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் நிலவுகிறது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வந்த இஸ்லாமிய சமூகத்தினருக்கு இந்த அறிவிப்பு பெரும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
பக்ரீத், ரம்ஜான் ஆகியவற்றை பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்க மாசசூசட்ஸ், மிச்சிகன், நியூஜெர்சி ஆகிய மாகாணங்களில் பல உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த நிலையில் நியூயார்க் நகரம்தான் முதன் முதலில் அந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் சமீப காலமாக நடந்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் ட்யூக் பல்கலைக்கழகம் தனது பல்கலைக்கழக வலாகத்தில் முஸ்லீம் பிரார்த்தனை மையத்திற்குத் தடை விதித்தது. கடந்த மாதம் வடக்கு கரோலினாவில் 3 முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்று வந்த 3 பேரை புரூக்ளின் போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் கேம்பிரிட்ஜ், மாசசூசட்ஸ், டியர்பார்ன், மிச்சிகன், பர்லிங்டன், வெர்மான்ட், பேட்டர்சன் ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு நாமாக விடுமுறை எடுத்துக் கொள்ளும் அனுமதி ஏற்கனவே உள்ளது. இருப்பினும் அரசுப் பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications