நியூஸிலாந்தில் முதலாவதாக பிறந்தது 2018 புத்தாண்டு.. வாண வேடிக்கைகளுடன் உற்சாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரத்தில் 2018-ம் ஆண்டு பிறந்தது. டைம் ஸோனில் இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன் உள்ளது நியூஸிலாந்து.

New Zealand Auckland city celebrates new year 2018 as the first country of the world

இந்தியாவில் 4.30 மணியாக இருக்கும் போது நியூஸிலாந்து 2018ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றது.
உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது.

இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு ஆக்லாந்து நகரம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆக்லாந்து நகரில் திரண்டிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்துதான் உலகின் புதிய நாள் பிறப்பு கணக்கிடப்படுகிறது.

நியூஸிலாந்தை தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ரஷ்யாவின் சில பகுதிகள் புத்தாண்டை கொண்டாடவுள்ளது.இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் புத்தாண்டை கொண்டாடுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New Zealand celebrates new year 2018. New Zealand Auckland city celebrates new year 2018 as the first country of the world.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X