'கொரோனால இருந்து எஸ்கேப் ஆகனும்ல..' ஒரே நாளில் 10 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட நபர்.. சுவாரஸ்யம்!!
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை எந்த நாடும் கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்கவில்லை.
அதேநேரம் தீவிர கட்டுப்பாடுகள் மூலம் சில நாடுகள் வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளது. இந்தச் சூழலில் ஓமிக்ரான் கொரோனா பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

கொரோனா வேக்சின் பணிகள்
தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சில ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளையும் கூட தொடங்கிவிட்டன. தற்போது வரை அனைத்து ஆய்வுகளிலும் வேக்சின் தீவிர கொரோனா பாதிப்பையும் உயிரிழப்பையும் குறைப்பதாகவே தெரிய வந்துள்ளது.

ஒரே நாளில் 10 டோஸ்
இருந்தாலும் கூட பொதுமக்களில் சிலர் வேக்சின் மீது நம்பிக்கை இல்லாமல், வேக்சின் எடுக்க மறுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஒரே நபர் வெறும் 24 மணி நேரத்திற்குள் 10 டோஸ் கொரோனா வேக்சினை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு
இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தகவல்களை நியூசிலாந்து அரசு வெளியிடவில்லை. இது தொடர்பாக நியூசிலாந்து நாட்டின் தடுப்பூசி நிபுணரும் இணைப் பேராசிரியருமான ஹெலன் பெட்டூசிஸ்-ஹாரிஸ் கூறுகையில், "இந்த நபரின் செயல் நம்பமுடியாத அளவிற்குச் சுயநலம் கொண்டதாக உள்ளது. இது வேக்சின் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பிரச்சனை ஏற்படாது
ஒரே நேரத்தில் இத்தனை டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட அந்த நபருக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த சில நாட்களுக்கு அவருக்குக் கடுமையான சோர்வு இருக்கும். வெளிநாடுகளில் ஒரே குப்பியில் இருக்கும் முழு ஐந்து டோஸ்களும் ஒரே நபருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் கூட பெரியளவில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை.ஒரே நேரத்தில் இத்தனை பல டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட அந்த நபருக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த சில நாட்களுக்கு அவருக்குக் கடுமையான சோர்வு இருக்கும். வெளிநாடுகளில் ஒரே குப்பியில் இருக்கும் முழு ஐந்து டோஸ்களும் ஒரே நபருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் கூட பெரியளவில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை.

என்ன ஆகும்
இருப்பினும், ஒரே நேரத்தில் இத்தனை டோஸ்களைப் பெறுவது சிறந்ததல்ல. ஒருவர் அதிக அளவு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் போது, அவர்களுக்கு அதிக காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி ஏற்படும். மேலும், சில சமயங்களில் உடலுக்கு ஆபத்து ஏற்படும். அனுமதிக்கப்பட்ட டோஸை விட அதிக டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்றார்.
Recommended Video

என்ன நடந்தது
அந்த ஒரே நபர் பல வேக்சின் மையங்களுக்குச் சென்று, மற்ற நபர்களின் அடையாள அட்டைகளைக் காட்டி வேக்சின் போட்டுக் கொண்டுள்ளார். இவர் எதற்காக இப்படிச் செய்து கொண்டார் என்பது குறித்துத் தெளிவான உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அதேநேரம் வேக்சின் செலுத்த அஞ்சியவர்கள், இந்த நபருக்கு வேக்சின் எடுக்கச் சொல்லி பணம் கொடுத்தாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications