மருத்துவ உதவி தாமதமானதால் இறந்து போன இரட்டைக்குழந்தைகள் – தாயும் கோமாவில்!
பர்மிங்காம்: இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆம்புலன்ஸை அழைத்த கர்ப்பிணி பெண்ணிற்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் அவரின் இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பர்மிங்காமில் உள்ள பிளேக் ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த ஜோஸ்லின் எனும் 27 வயது பெண் 34 வார கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிர்பாராத விதமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.
12 நிமிடங்கள் கழித்து வருகை:
ஜோஸ்லின் மருத்துவ உதவிக்காக அழைத்து 12 நிமிடங்கள் கழித்து அவரது வீட்டிற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்களால் அவர்களது வீட்டினுள் நுழையமுடியவில்லை.
காவல்துறையினரின் உதவி:
உடனடியாக காவல் துறையினரின் உதவியை நாடிய மருத்துவ பணியாளர்கள் 30 நிமிடங்கள் கழித்து ஜோஸ்லினின் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்:
அங்கு இதய துடிப்பு நின்றிருந்த நிலையில் தரையில் விழுந்துகிடந்த ஜோஸ்லினை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மருத்துவ உதவியாளர்கள், அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகளையும் வெளியேற்றினர்.
நிறுத்தப்பட்ட உயிர்காக்கும் கருவிகள்:
ஆனால், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உள் உறுப்புகள் பாதிப்படைந்ததால் குழந்தைகள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால் குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் நிறுத்தப்பட்டது.
சோகத்தில் குடும்பத்தினர்:
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.
கோமாவில் தாய்:
கடும் சோகத்தில் மூழ்கிய இவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பது போல குழந்தைகளின் தாய் ஜோஸ்லினும் கோமாவில் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சரியான நேரத்தில் உதவி இல்லை:
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த ஜோஸ்லினின் தந்தை, "என் மகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால், நான் எனது இரண்டு பேத்திகளை இழந்திருக்க மாட்டேன்.
மருத்துவ உதவி அவசியம்:
எனது மகள் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவசர காலங்களில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications