சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ்.. ஆபத்தானதா? பரவுமா? அறிகுறிகள் என்ன? அறிய வேண்டிய தகவல்கள்
பீஜிங்: கொரோனா பெருந்தொற்றை ஏற்படுத்திய வைரசை போன்றதொரு புதிய HKU5-CoV-2 என்ற வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதா? பாதிப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கூட மக்கள் மத்தியில் இருந்து முழுமையாக மறையவில்லை. ஆனால் சீனாவில் அடுத்தடுத்து புதிய வைரஸ்கள் வெளிப்பட்டு மக்களை பீதி அடைய வைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெச்.எம்.பி.வி வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது HKU5-CoV-2 என்ற வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் புதிய வைரஸ்
வூஹான் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். வவ்வால்களிடம் இருந்து பரவக் கூடிய இந்த வைரஸ், விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படும் இந்த வைரஸ், ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது. இந்த வைரசும் கொரோனா பெருந்தொற்றை போலவே, மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது இதற்கு முன்பாக கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
இதுவரை HKU5-CoV-2 வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனவே இதன் அறிகுறிகளும் உறுதியாக தெரியவில்லை. எனினும், மெர்ஸ் மற்று கொரோனா பெருந்தொற்று போலவே இந்த வைரஸும் சுவாச மண்டலத்தை தாக்க கூடியது என்பதால் அதே மாதிரியான சுவாச உறுப்புகளை பாதிக்கும். அதாவது, இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை புண், பலவீனம், உடல் வலி ஆகியவை இருக்க கூடும்.
இந்த வைரஸ் எப்படி பரவும்
இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவக் கூடியது. சளி, சிறுநீர், மலம் உள்ளிட்ட உடல் திரவங்களில் இருந்து இந்த வைரஸ் பரவும். இதுபோக இந்த வைரஸ், மனிதனுக்கு பரவும் முன்பாக பிற பாலூட்டி வகை உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதாவது கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியதோ அதே மாதிரி பரவக் கூடியது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கிவிட்டு சென்றது. இந்த வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதால், சீனாவில் இருந்து வெளிப்படும் வைரஸ்கள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் மீண்டும் சீனாவில் புதிய வைரஸ் வெளிப்பட்டு இருப்பதாக வெளியாகும் தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications