சகாரா பாலைவனத்தை நடந்து கடக்க முற்பட்ட 35 பேர் தாகத்தால் பலியான சோகம்
அகடெஸ்: நைஜர் நாட்டைச் சேர்ந்த 35 பேர் சகாரா பலைவனத்தைக் கடந்து செல்ல முற்பட்ட போது, தண்ணீர் இன்றி தாகத்தால் வாடி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டில் நிலவும் வறுமை காரணமாக, பிழைப்புத் தேடி அப்பகுதி மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில், சகாரா பாலைவனம் வழியாக கடக்க முற்பட்ட 35 பேர் தாகத்தால் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வறுமை காரணமாக...
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டின் அகடெஸ் நகரிலிருந்து வறுமை காரணமாக 60 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக சஹாரா பாலைவனம் வழியாக இரு வாகனங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தில் கோளாறு...
சஹாரா பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டின் டாமன்ரசட் என்ற நகரை நோக்கி செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வாகனத்தில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கால்நடைப் பயணம்...
இதையடுத்து வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் பெண்கள், குழந்தைகள் என அவர்கள் கால் நடையாக பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலைவனத்தை கடக்க முயன்றுள்ளனர்.

தண்ணீர் தாகத்தில்....
பல நாட்கள் நூற்றுக்கணக்கான மைல் பாலைவனத்தில் நடந்த அவர்களது உடலில் தண்ணீர் வற்றிய நிலையில் தொண்டை வறண்டு போயுள்ளது. இதனால் உயிருக்கு போராடிய அவர்களில் 35 பேர் குடிக்க தண்ணீரின்றி பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.

ராணுவத்தினர்...
உயிர் தப்பிய சிலர் மட்டும் எப்படியோ பல நாட்கள் நடந்து, சகாராவைக் கடந்து வழியில் இருந்த அர்லிட் நகரை அடைந்துள்ளனர். பின்னர், நடந்த சம்பவத்தை அவர்கள் அங்குள்ள ராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

5 சடலங்கள்...
அதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இதுவரை 5 பேருடைய சடலம் மட்டும் மீட்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications