10 வயது சிறுமியின் உடலில் வெடிகுண்டு பெல்ட்: நைஜீரியாவில் பரபரப்பு
அபுஜா: நைஜீரியாவில் 10 வயது சிறுமியின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி பயணம் செய்த 2 போக்கோ ஹரம் தீவிரவாதிகள் என்று கருத்தப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நைஜீரியாவில் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து மக்களை தாக்குவது, கடத்துவது என்று அட்டகாசம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வடக்கு நைஜீரியாவின் மிகப் பெரிய நகரமான கனோவில் இருந்த கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் சென்ற ஹோண்டா சிஆர்வி காரை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ஹல்திசா(10) என்ற சிறுமியின் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிறுமியுடன் இருந்த இலியா மற்றும் ஜைனப் ஆகிய பெண்கள் காருடன் தப்பிக்க முயன்றனர்.
அவர்களை பொது மக்கள் பிடித்து ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இலியா மற்றும் ஜைனப் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications