நைஜீரியாவில் ஒரே நாளில் 95 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
மைடுகுரி: நைஜீரியாவில் போஹோ ஹரம் தீவிரவாதிகள் 95 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
நைஜீரி உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்ட ஆட்சியை அமைக்க கோரி ஆயுதமேந்தி போராடி வருகிறது போஹோ ஹரம் தீவிரவாத இயக்கம்.
இந்த தீவிரவாத இயக்கத்தின் இலக்கு கிறிஸ்துவ தேவாலயங்களை தாக்குவது, பொது இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்துவது என்பதாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாவட்டத்தில் உள்ள வடகிழக்கு பகுதிகளில் போஹோ ஹரம் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அந்நாட்டு ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் அந்நாட்டின் விமானப் படையும் ஈடுபட்டது.
இத் தாக்குதலில் நேற்று ஒரே நாளில் 95 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் குண்டு காயங்களுடன் தப்பியோடி பதுங்கிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications