பறக்கும்போதே நடுவானில் பிரசவம் – விமானத்தில் குழந்தை பெற்ற நைஜீரியப் பெண்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து சென்ற விமானத்தில் நடுவானிலேயே நைஜீரியப் பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நைஜீரியாவில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. அதில் நைஜீராயாவைச் சேர்ந்த கர்ப்பிணியான உஜுன்வா ஒஷே தன் குழந்தையுடன் பயணம் செய்தார்.

விமானம் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது ஒஷேவாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விமானத்தில் பிரசவம்:

விமானத்தில் பிரசவம்:

உடனடியாக விமானத்தில் பயணித்தவர்கள் அந்த பெண் குழந்தையை பத்திரமாக பெற்றெடுக்க உதவினர். ஆறரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனே தரையிறக்க வலியுறுத்தப்பட்டது.

தரையிறக்க முடிவு:

தரையிறக்க முடிவு:

விமானியும் தாய் மற்றும் குழந்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்ததையும் பொருட்படுத்தாமல் தரையிறக்க முடிவு செய்தார்.

தீவில் உள்ள விமானநிலையம்:

தீவில் உள்ள விமானநிலையம்:

அப்போது விமானம் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவான பலேரிக் தீவுகளுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தது. அங்குள்ள பால்மி டி மலோர்ஸ் என்ற விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விமானம் தரையிறக்கப்பட்டது.

தயாராக ஆம்புலன்ஸ்:

தயாராக ஆம்புலன்ஸ்:

அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் தாயும் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பறந்து சென்றது.

அமெரிக்கா செல்ல திட்டம்:

அமெரிக்கா செல்ல திட்டம்:

36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்த விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண் கூறியதாவது, "நான் எனது குழந்தையுடன் அமெரிக்கா செல்ல வேண்டும். லண்டனில் இறங்கி மற்றொரு விமானத்தில் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்தேன்.

மிக்கேல் என்று பெயர்:

மிக்கேல் என்று பெயர்:

எனக்கு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்க வேண்டும். ஆனால் முன்கூட்டியே குழந்தை பிறந்ததால் குழந்தையை மருத்துவமனையில் வைத்து கவனிக்க வேண்டியுள்ளது. குழந்தைக்கு மிக்கேல் என பெயர் வைத்துள்ளேன்.

நல்ல ஆரோக்கியம் தேவை:

நல்ல ஆரோக்கியம் தேவை:

எனக்கு என் குழந்தை தேவை. ஆகவே இங்கே தங்குவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. என்னோடு அவன் வீட்டுக்கு வரும்போது நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+