தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தல் - இந்திய-அமெரிக்கர் நிக்கி ஹேலே 2வது முறையாக வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலே இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக குடியரசுக் கட்சியைச் சேர்த நிக்கி ஹேலே மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வின்செண்ட் ஷெஹீன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய அமெரிக்க ஆளுநரான நிக்கி ஹேலே (42) முன்னணியில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் நிக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இறுதி கட்ட தகவல் அடிப்படையில் 55 சதவீத வாக்குகளுடன் நிக்கி முன்னணியிலும், 41 சதவீத வாக்குகள் பெற்று ஷெஹீன் அவருக்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.
நிக்கியின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்கள். நிக்கி வெற்றி பெற்று மீண்டும் 2வது முறை ஆளுநர் பதவியை ஏற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தல் பிரசாரத்தின்போது, நிக்கிக்கு ஆதரவாக அக்கட்சியின் புளோரிடா மாகாண முன்னாள் ஆளுநர் ஜெப் புஷ், லூசியானா மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களின் ஆளுநர்கள் முறையே பாபி ஜிண்டால் மற்றும் கிறிஸ் கிறிஸ்டீ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications