வங்கதேசத்தில் மீண்டும் இந்துக்கள் மீது குண்டுவீச்சு- துப்பாக்கிச் சூடு: 9 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் இந்துக்கள் மீது குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
வங்கதேசத்தின் தின்ஜ்பூர் மாவட்டத்தில் அண்மையில் இந்துக்கள் நடத்திய திருவிழாவின் போது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமையன்றும் அதே தின்ஜ்பூர் மாவட்டத்தில் இந்து கோவிலில் கூடியிருந்தோர் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேருக்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
இத்தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் என்ற அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications