வைர வியாபாரி.. நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு! லண்டன் நீதிமன்றம் அதிரடி
லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நீரவ் மோடி, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமீன் கோரி அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது.
இது அவரது 10வது ஜாமீன் மனுவாகும். தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாக அவர் புகார் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. மொத்தம் ரூ.13,000 இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதில் ரூ.6498.20 கோடி இவர் முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே நீரவ் மோடி லண்டனில் பதுங்கிவிட்டார். இதனையடுத்து அவர் மீது மத்திய அரசு குற்றசாட்டுகளை அடுக்கியது. தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்படி இருக்கையில், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறி, ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 9 முறையும் மனுவை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த முறை சிபிஐ, நீரவுக்கு எதிராக கடுமையாக வாதாடியிருந்தது. இதனையடுத்து அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஜாமீன் கிடைத்தால் தப்பி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதால் ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த வழக்கு கணிசமான மோசடி குற்றச்சாட்டை உள்ளடக்கியது" என்று கூறியுள்ளனர். மறுபுறம் நீரவ் மோடி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்திய அரசு தரப்பிலிருந்து நீரவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இருப்பினும் நீரவ் தப்பி ஓடமாட்டார். இந்தியா அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கியர்களை குறி வைத்து சதி திட்டங்களை தீட்டி வருகிறது" என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. அவர் இந்தியாவுக்கு வந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையை பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் நீரவ் மோடிக்கு எதிராக மூன்று வகையான குற்றவியல் நடவடிக்கைகள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்ததாக சிபிஐ பதிந்த வழக்கு. இரண்டாவதாக அந்த மோசடியின் மூலம் வந்த பணத்தை சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை போட்ட வழக்கு, மூன்றாவதாக சிபிஐ விசாரணையில் சாட்சியங்களில் தலையீடு செய்ததாக என மூன்று வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications