டிரம்ப்பிற்கு இல்லை.. அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கோரினாவுக்கு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் திங்கள்கிழமை முதல் வெளியாகி வருகிறது. ஐந்தாம் நாளான இன்று உலகமே எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தனக்குத் தான் வழங்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படும். சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபலின் (Alfred Nobel) என்ற ஆய்வாளரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Peace Prize 2025 Announcement will happen today Will Donald Trump gets the prize like Obama

அமைதிக்கான நோபல் பரிசு

ஐந்தாம் நாளான இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விருது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. வழக்கமாகவே அமைதிக்கான நோபல் பரிசு மீது தான் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்தாண்டு அதன் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்றே சொல்லாம்.. அதற்குக் காரணம் டிரம்ப் தான்.! அமெரிக்க அதிபரான டிரம்ப் தனக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார். ஒரு கட்டத்தில் அமைதிக்கான நோபல் பரிசை எனக்குத் தரவில்லை என்றால் அது அமெரிக்கர்களுக்கு அவமானம் என்று கூடச் சொல்லிவிட்டார்.

அடம்பிடிக்கும் டிரம்ப்

இன்று கூட மீண்டும் அவர் நோபல் பரிசு குறித்துப் பேசியிருந்தார். தான் காசாவில் அமைதியைக் கொண்டு வந்ததாகவும், எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் டிரம்ப் தனது சாதனைகளைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், விருதுகள் பெறுவது தனது நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், அவர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்ததில் லாஜிக்கே இல்லை என்றும் விமர்சித்தார்.

ஒபாமா மீது விமர்சனம்

இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "பராக் ஒபாமா அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுத்தார்கள். அதில் என்ன லாஜிக். ஒபாமா எதையும் செய்யாமலேயே அதைப் பெற்றார். எதற்காக அந்த விருதைப் பெற்றோம் என்பது ஒபாமாவுக்கே தெரியாது.. நமது நாட்டை அழிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாத ஒபாமாவுக்கு அவர்கள் அதைக் கொடுத்தார்கள்" என்று விமர்சித்தார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 2009ல் அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டது. அப்போது அவர் பதவியேற்ற எட்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. மக்களுக்கிடையே ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அப்போது கூறியிருந்தது. இருப்பினும், அந்த முடிவு எப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. எனவே, மீண்டும் ஒரு அரசியல் தலைவருக்கு இந்த விருது கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+