சனிக்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - சிக்சர் அடிப்பாரா இம்ரான் கான்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏப்ரல் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த ஞாயிறு அன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

சபாநாயகர் கொடுத்த ட்விஸ்ட்
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானோ கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என தெரிவித்தார். தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். ஆனால் இதை சமாளிக்க தன்னிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளதாக கூறினார் இம்ரான் கான்.
இந்த நிலையில் ஞாயிறு அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்
இதன் பின்னர் பேசிய இம்ரான் கான், "அந்நிய சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஊழல்வாதிகள் நாட்டை ஆளக்கூடாது. நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பாகிஸ்தானில் அரசை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளேன்." என்றார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததுடன் இம்ரான் கானே காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் 90 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

ஏப்ரல் 9 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்
இது குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தப்புவாரா இம்ரான் கான்
342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிக்களுமே இம்ரான் கானுக்கு எதிராக நின்றதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications