மோடி பதவியேற்பு விழா.. நவாஸ் ஷெரீப் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை: பாக்.
இஸ்லாமபாத்: இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க இருக்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்றுக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தன்ஷிம் அஸ்லாம், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும் இந்தியா அனுப்பிய அழைப்பிதழ் கிடைக்கப்பட்டிருந்தது. அது பற்றி பிரதமர் அலுவலகம் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இந்தியாவின் பிரதமர் ஒருவர் பதவியேற்கும் விழாவுக்கு அண்டைநாட்டு தலைவர்களை அழைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications