செக் நாட்டு நாடாளுமன்றத் தேர்தல்: எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை
பிராகு: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் செக் நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்படவுள்ளது.
கடந்த ஜூனில் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக செக் குடியரசு நாட்டில் பிரதமர் பிடர் நெகஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், சோஷியல் ஜன நாயக கட்சி தலைமையில் கூட்டணி கட்சி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இத்தேர்தலில், சோஷியல் ஜனநாயக கட்சி 20 சதவீத ஓட்டுகளை பெற்று முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக ஏ.ன்.ஓ. கட்சி 19 சதவீதம் வாக்குகளை பெற்று 2-வது இடத்தையும், கம்யூனிஸ்டு கட்சி 15 சதவீதம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications