For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் நாடுகள் பட்டியல்.. இலங்கை சூப்பர்.. இந்தியா மோசம்!

Google Oneindia Tamil News

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் மற்றும ஆரோக்கிய வாழ்வுக்கான நிலைத்தன்மை குறீயீட்டில் 77வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.

உலசு சுகாதார நிறுவனம். யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம்முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் ஆய்வு மேற்கொண்டது. 40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.

இந்த ஆய்வின் முடிவுகளை நிலைத்தன்மை மற்றும் செழிப்பு குறியீடு ஆகிய இரு பிரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. செழிப்பு குறியீடு என்பது 5வயதிற்கு உட்டபட்ட குழந்தைகளுக்ளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, தற்கொலை, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை ஆகியவை அடங்கும் . அதேபோல் கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்பு குறியீடாக கணக்கிடப்பட்டுள்ளது

மாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்டார்!மாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்டார்!

கார்பன் டை ஆக்ஸைடு

கார்பன் டை ஆக்ஸைடு

இதேபோல் நிலைத்தன்மை என்பது கார்பன்டை ஆக்சைடை அந்த நாடுகள் வெளிப்படுத்தும் அளவு, எதிர்கால வளர்ச்சிகான நாடுகளின் பங்களிப்பு ஆகியவை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி நிலைத்தன்மை குறியீடு என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் மற்றும ஆரோக்கிய வாழ்வுக்கான நிலைத்தன்மை குறீயீட்டில் 77வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

ஐநா அறிக்கை கவலை

ஐநா அறிக்கை கவலை

அதேநேரம் குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில். அதாவது செழிப்பு திறன் குறியீட்டில் இந்தியாவுக்கு 131வது இடமே கிடைத்துள்ளது. அதேநேரம் இந்த பட்டியலில் சீனா 43 வது இடத்தையும், இலங்கை 68வது இடத்தையும், சிங்கப்பூர் 12வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும், வங்கதேசம் 143வது இடத்தையும் பிடித்துள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமாகவும், அதற்கு ஏற்ற சுற்றுச்சூழலையும் கொண்டிருப்பதற்கான ஐநாவின் இலக்கை உலகின் எந்த நாடுகளுமே எட்டவில்லை என்று அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா 2வது

தென்கொரியா 2வது

குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, நல்ல ஆரோக்கியம், கல்வி, ஊட்டசத்து உள்ளிட்டவற்றை வழங்கும் நாடுகள் பட்டியலில் நார்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேநேரம் இந்த நாடுகள் கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் இந்த நாடுகள் முறையே 156,166,160 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

 நொறுக்குத்தீனிகள்

நொறுக்குத்தீனிகள்

வர்த்தக கலாச்சாரம் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளை கவரும் வகையில் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்ற சாப்பிட்டால் குழநதைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், அவர்களின் உடல் எடையும் அதிகரித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உலக அளவில் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

English summary
World failing to provide children with a healthy life and a climate fit for their future: WHO-UNICEF-Lancet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X