இயற்பியலுக்கான நோபல் பரிசு 2023: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
வாஷிங்டன்: நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்டினி, பெரென்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரான் மற்றும் ஆற்றலை விரைவாக செயல்முறைப்படுத்தும் அளவீடுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை கண்டறிந்ததால் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அணுக்களில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்காக புதிய கருவியை இவர்கள் 3 பேரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அணுக்களில் மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதன் மூலம் புதுவிதமான ஒரு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இது அறிவியல் உலகத்திற்கும், வருங்கால தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குவாண்டம் மெக்கானிக் என்பது போன்ற விஷயங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கருவியில் இவர்கள் 3 பேரின் பங்களிப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் ஏஜ் ஆப் யுனிவர்ஸ் போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும். அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி உற்பத்தியில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரே வீஸ்மேன் என இருவரும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி உருவாக்கியதற்காக அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்/ஆய்வாளர் நோபல் பரிசு வென்றிருந்தாலும், சர்வதேச அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகம். இவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான mRNA தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
கொரோனா வைரஸில் உள்ள மரபு சங்கிலியான RNAவில் பல பிரதிகள் இருக்கும். இதில் ஒன்றுதான் mRNA. இந்த mRNA பிரதியை தனியாக பிரித்தெடுத்து, அதைபோலவே போலியான ஒன்றை உருவாக்கி அதை உடலுக்குள் செலுத்தினால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், போலியான mRNAவை எதிர்த்து சண்டை செய்யும்.
பின்னர் இதேபோன்று எப்போதாவது உண்மையான mRNA வந்தாலும் அதற்கு எதிராக சண்டை செய்து, தொற்று பாதிப்பிலிருந்து மனிதனை காப்பாற்றிவிட முடியும். இதை அடிப்படையாக கொண்டுதான் தடுப்பூசிகளை ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன












Click it and Unblock the Notifications