For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'உங்க வேலையை மட்டும் பாருங்க'.. ஹாங்காங் சட்டத்தை விமர்சித்ததால்... சீனா கடும் எரிச்சல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஹாங்காங்கிற்கான சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சர்வதே அளவில் விமர்சனங்கள் வந்ததால் கோபம் அடைந்த சீனா, மற்ற நாடுகள் எங்கள் நாட்டின் விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது என்றும், அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது என்றும் எச்சரித்துள்ளது,.

Recommended Video

    விமர்சனத்திற்கு உள்ளாகும் Hongkong சட்டம்... கடுப்பில் இருக்கும் China

    பல நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து, கடைசியாக தனது ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை கடந்த 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. சீனாவின் காட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக ஹாங்கில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

    ஒட்டுமொத்த ஹாங்காங்கிலும் வெடித்த போராட்டத்தால் அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. ஆனால் போராட்டங்கள் ஓயவில்லை. அவ்வப்போது துளிர்வதும், குறையுவதுமாக உள்ளது. நீர்பூத்த நெருப்பாக ஹாங்காங்கில் சீனாவிற்கு எதிரான மனநிலை மாறி வருகிறது.

    விற்பனைக்கு வரும் பதஞ்சலி மருந்து.. 7 நாட்களில் கொரோனாவுக்கு 100% தீர்வு.. அடம் பிடிக்கும் ராம்தேவ் விற்பனைக்கு வரும் பதஞ்சலி மருந்து.. 7 நாட்களில் கொரோனாவுக்கு 100% தீர்வு.. அடம் பிடிக்கும் ராம்தேவ்

    ஹாங்காங் மக்கள்

    ஹாங்காங் மக்கள்

    ஹாங்காங் மக்கள் தங்கள் பகுதி அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல் நடத்த வேண்டும். போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று கோரி போராடி வருகிறார்கள்.

    ஹாங்காங்கில் புதிய சட்டம்

    ஹாங்காங்கில் புதிய சட்டம்

    இந்தப் போராட்டங்கள் பல மாதங்களாக தொடர்ந்து வருவதால், சீனா இதை தடுக்க என்னசெய்வது என்று தெரியாமல் தவித்து வந்தது. .இதற்கிடையே போராடியவர்களை , ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. மேலும் எதிர்காலத்தில் இது போல சீன எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என சீனா அறிவித்து.

    மேற்கத்திய நாடுகள்

    மேற்கத்திய நாடுகள்

    கடந்த மாதம் 22ந் தேதி சீன நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திற்கு சீனா நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ‘ஒரு நாடு 2 அமைப்புகள்‘ நடைமுறையை அழிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.

    சீனா கடும் கோபம்

    சீனா கடும் கோபம்

    அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சுதந்திரத்தை விரும்பும் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்று அமெரிக்கா கூறியது. இதனால் கோபம் அடைந்த சீனா மற்ற நாடுகள் எங்கள் நாட்டின் விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது என்றும், அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது என்றும் எச்சரித்துள்ளது,.

    உங்கள் வேலையை பாருங்க

    உங்கள் வேலையை பாருங்க

    சீன அதிகாரிகள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டம் குறித்து விமர்சித்த நாடுகள் குறித்து கேட்டனர். அதற்கு "இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" இது உங்கள் வேலை இல்லை, உங்கள் வேலையை மட்டும் பாருஙகள் என்று ஹாங்காங்கின் ஜாங் சியோமிங் மற்றும் மாநில கவுன்சிலின் மக்காவோ விவகார அலுவலக அதிகாரிகள் கூறினர்.

    English summary
    China slammed international criticism over a controversial new national security law for Hong Kong, saying 'None Of Your Business'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X