அமெரிக்காவின் தலையெழுத்து எங்கள் கையில்!... "கொழந்தசாமி"யின் சின்னப்புள்ளத்தன பேச்சு!!
அமெரிக்காவின் தலையெழுத்து எங்கள் கையில் உள்ளது என்று வடகொரிய நாட்டின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பியாங்கியாங்: அமெரிக்காவின் தலையெழுத்து தங்கள் கையில் உள்ளதாக வடகொரிய நாட்டின் சார்பில் வெளியிடப்பட்டு மிஞ்சுசோஷன் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டும் அதிபர் கிம் ஜங் திருந்துவதாக தெரியவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு ஏட்டிக்கு போட்டியாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வடகொரியா செலுத்தி வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடுங்கோபத்தில் உள்ளன.
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு இது நேரமில்லை என்றும், ராணுவ நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வடகொரிய அமைச்சரவை சார்பில் வெளியிடப்படும் மிஞ்சு சோசன் பத்திரிகையில், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் வடகொரியாவை மிரட்டும் அமெரிக்காவின் போக்கு தொடர்ந்து நீடிக்க முடியாது.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அதிபர் டிரம்ப் காத்திருக்கும் உடனடி ஆபத்தை அறியாமல் இருக்கிறார். வடகொரியா குறித்த அறியாமையால் அதிபர் டிரம்ப் அமெரிக்காவை ஆபத்துக்குள்ளாக்கப்போ போகிறார். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தங்களை எதுவும் செய்துவிடமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications