அரை மணி நேரம் முன்னாடி சென்றார்கள்.. தென்கொரியாவிற்காக நாட்டின் நேரத்தையே மாற்றிய வடகொரியா!
தென்கொரியா பின்பற்றி வரும் நேரத்தையே பின்பற்ற வட கொரியா நாடு முடிவு செய்துள்ளது.
பியாங்யாங்: தென்கொரியா பின்பற்றி வரும் நேரத்தையே பின்பற்ற வட கொரியா நாடு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த நாட்டின் நேரம் அரைமணிநேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. இது பெரிய புரட்சியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் மொத்தமாக மாறி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டார்கள்.
இதனால் 60 வருடமாக வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் நடந்து வந்த சண்டை எல்லாம் முடிவுக்கு வந்து இருக்கிறார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே இதற்கான சுவடுகள் தெரிந்தது.
|
வைரல் வீடியோ
இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இரண்டு அதிபர்களும் ஒரு காலடி எடுத்து வைத்து, இரண்டு நாட்டு எல்லைகளையும் கடந்து புதிய வரலாறு படைத்தார்கள். அவர்களின் சந்திப்பு காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இருந்த பிரச்சனை மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது.

முதலில் மாற்றினார்
வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பெரிய பிரச்சனை இருந்த சமயம் அது. கடந்த 2015ல் வடகொரியா மொத்தமாக தென்கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. அவர்களிடம் இருந்து முழுவதுமாக வேறுபட ஆசைப்பட்டு, தென்கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பயன்படுத்தியது. தென்கொரியாவில் மணி 9 என்றால், வடகொரியாவில் நேரம் 8.30ஆக இருக்கும்.

கஷ்டம்
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜெ-இன் ஆகியோர் சந்தித்தார்கள். அப்போது அந்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றில் வடகொரியா நேரமும், மற்றொன்றில் தென்கொரிய நேரமும் இருந்துள்ளது. இதை பார்த்து இரண்டு தலைவர்களும் வருந்தியுள்ளனர்.

நேரத்தை மாற்றினார்
இதையடுத்து, கிம் ஜாங் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார். அதோடு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அரை மணிநேரம் அதிகமாகி உள்ளது. எல்லா மக்களும் அரை மணி நேரத்தை அதிகப்படுத்தி, மீண்டும் தென்கொரியாவோடு ஒன்றிணைந்தார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications