''தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி; ஒபாமா ஒரு புரோக்கர்''... வடகொரியா தாக்கு
சியோல்: "ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி" என வட கொரியா பகிரங்கமாக தாக்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஷியுன் ஹையை சந்தித்து பேசினார்.

அணுகுண்டு சோதனை:
அதன் பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, "அண்டை நாடான வட கொரியா 4 ஆவது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருகிறது. அது செயற்கை கோளின் புகைப்படங்கள் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடை:
அமெரிக்க அதிபர் ஒபாமா, "வட கொரியா இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்படும். மேலும் பல பொருளாதார தடைகள் விதிக்கப்படும்" என எச்சரித்தார்.
ஆபாச வார்த்தைகளில் தாக்கம்:
இது வட கொரியாவுக்கு கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை பிரபலிக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களையும் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக தாக்கியுள்ளது.
கீழ்த்தர நடவடிக்கை:
இதுகுறித்து வட கொரியாவின் சமாதான மறு சீரமைப்பு கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கடந்த சில நாட்களாக தென் கொரிய அதிபர் பார்க் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரின் நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது.
அறிவில்லா அதிபர்:
தென்கொரிய அதிபர் பார்க் அறிவு வளர்ச்சியற்ற ஒரு பெண். அவரின் செயல் தனக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை ஏவிவிட்டு தாக்கும்படி கெஞ்சுவது போன்று உள்ளது.
ஒபாமா ஒரு புரோக்கர்:
மேலும், ஒரு புத்திசாலித்தனமான விபசாரி, ஒருவரை அழிக்க பலமிக்க புரோக்கர் ஒருவரிடம் தனது உடலை விற்பது போன்று கருத வேண்டியுள்ளது.
அஞ்சமாட்டோம் நாங்கள்:
அவர்கள் இருவரும் வேறு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதை சகித்து கொள்ள முடியாது. ஒபாமாவும், பார்க்கும் எங்கள் மீதான மிரட்டல் மற்றும் பிளாக் மெயிலை நிறுத்தி கொள்ள வேண்டும். அவர்களின் முட்டாள்தனமான மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத பிரச்சினை:
வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே சமீப காலமாக அணு ஆயுத பிரச்சினை காரணமாக சர்ச்சை இருந்து வருகிறது. இதையடுத்து தென் கொரிய அதிபர் பார்க் மீது வட கொரியா கடுமையான வார்த்தைகளை உபயோகித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications