சத்தமே இல்லாம வட கொரியா செய்த சம்பவம்.. “ஸ்பை சாட்டிலைட்”.. பதறிய ஜப்பான்.. ஆனா கடைசியில்.. போச்சே!
சியோல்: உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று உளவு செயற்கைக்கோளை வட கொரியா ஏவிய நிலையில், சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை (SSBN) அமெரிக்கா அனுப்பியது. தென் கொரியா, தங்களது ராணுவ பலத்தை உயர்த்தி வருவது வட கொரியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது.
தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க முயன்று வருகிறது வடகொரியா. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்த உளவு செயற்கைக்கோளை நிலைநிறுத்த திட்டமிட்டு வருகிறது வடகொரியா.
இந்நிலையில் உளவு செயற்கைக்கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இந்நிலையில் வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக பதறிப்போய் ஜப்பான் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்தது.
வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் (NADA) தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது. அதேசமயம் ராக்கெட் அமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையின் அடிப்படையில் இது "பெரிய பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளதாக வட கொரிய அரசின் ஊடகம் KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
தோல்விக்கான காரணத்தை முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்த பிறகு மூன்றாவது உளவு செயற்கைக்கோள் ஏவுதலை அக்டோபரில் நடத்துவோம் என்ற நிலைப்பாட்டை வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் வெளிப்படுத்தியது என்று KCNA தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வட கொரியாவின் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதிலிருந்து கண்காணித்ததாகவும், அது தோல்வியடைந்துள்ளதாகவும் தென் கொரியா இராணுவமும் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications