கதறி அழுத கிம் ஜாங் உன்.. ரஷ்யாவால் உடைந்து போன சர்வாதிகாரி.. மக்களிடம் மன்னிப்பு..என்னாச்சி?
பியோங்யாங்: உலகில் தற்போது சர்வாதிகார தலைவர்களில் ஒருவராக அறியப்படுவர் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன். ஏவுகணை சோதனைகள் செய்து அடிக்கடி அமெரிக்காவையையே அலறவிடும் தலைவராக வலம் வருகிறார் கிம் ஜாங் உன். இந்நிலையில் தான் சொந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி குழந்தைகளை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
உருட்டு முகம்.. கண்ணில் கண்ணாடி.. கலையாத சிகை அலங்காரம்.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு இணங்க சற்று உயரம் குறைந்தாலும் தன் கம்பீரத்தை குறைக்காதவர்.. எப்போது கோட் அணிந்து வலம் வரும் அதிபர் தான் கிம் ஜாங் உன். வடகொரியா அதிபரான இவர் இன்றைய உலகின் சர்வாதிகாரியாகவே அழைக்கப்படுகிறார்.

வடகொரியாவில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள. வெளியில் இருந்து வடகொரியாவுக்கும், வடகொரியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்கள் எளிதில் சென்று வர முடியாது. மக்கள் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும், எந்த மாதிரியான சேனலை பார்க்க வேண்டும் என்பது வரை வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிம் ஜாங் உன் அழும் வீடியோ
மேலும் கிம் ஜாங் உன்னின் உத்தரவை மீறுவோர் உடனடியாக தூக்கிலிடப்படுகின்றனர். அதிகாரிகளாக இருந்தாலும் சரி, சாதாரண மக்களாக இருந்தாலும் சரி விதியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இப்படி சர்வாதிகாரியாக வலம் வரும் கிம் ஜாங் உன் தற்போது திடீரென்று கதறி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
கிம் ஜாங் உன்னின் இந்த அழுகையின் பின்னணியில் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். அமெரிக்காவின் பரம எதிரியாக வடகொரியா விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது கிம் ஜாங் உன் மேற்கொண்டு வருகிறார். எதிரிக்கு எதிரி கூட்டாளி என்று பெரியவர்கள் சொல்வது உண்டு.
ரஷ்யாவுக்காக களமிறங்கிய வீரர்கள்
அந்த வகையில் அமெரிக்காவின் மற்ற எதிரிகளான சீனா மற்றும் ரஷ்யாவுக்கு வடகொரியா நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளது.
ரஷ்யா - வடகொரியாக இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. இரு நாட்டில் யாருக்காவது பாதுகாப்பு பிரச்னை வந்தால், ஒருவர் இன்னொருவருக்கு ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என்பது தான். அதன்படி உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா வீரர்கள் போர் புரிந்து வருகின்றனர்.
போரில் மரணடைந்த வீரர்கள்
வடகொரியாவை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போரில் ஈடுபட்டு வுருகின்றனர். ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தின் பெரும் பகுதியை உக்ரைன் கைப்பற்றி இருந்தது. அதை மீட்க ரஷ்யா வீரர்களுடன் வடகொரியா வீரர்கள் போரிட்டனர். இதில் உக்ரைன் தாக்குதலில் வடகொரியா வீரர்கள் பலியாகினர். இவர்களின் உடல்கள் வடகொரியா கொண்டு செல்லப்பட்டது.
ரஷ்யா, உக்ரைன் எல்லையில் உயிர் நீத்த வடகொரிய வீரர்களுக்காக தங்கள் தலைநகர் பியோங்யாங்கில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. அப்போது இறந்தவர்களின் உடல்களுக்கு கிம் ஜாங் உன் மலர் வளையம் வைத்தார்.
மன்னிப்பு கேட்ட கிம்
அதன்பிறகு வீரர்களின் போட்டோவுக்கு பதக்கம் அணிவித்து கவுரவம் வழங்கி அஞ்சலி செலுத்தினார். வீரமரணமடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று புகழ்ந்தார். அதோடு போரில் மரணம் அடைந்தவர்களை நினைத்து கிம் ஜாங் உன் கண் கலங்கினார்.
அதுமட்டுமின்றி ‛நாட்டுக்கு பெருமை தேடி தந்தவர்களை நேரில் பார்க்க முடியவில்லை. இவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. வீரர்களை இப்படி போட்டோவில் பார்க்கும் போது என் இதயம் வலிக்கிறது' என்றார். மேலும் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினரை பார்த்து பேசிய அதிபர், ‛‛உங்களிடம் எனது வருத்தத்தை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாட்டின் தனித்துவமான மகன்களை பாதுகாக்க முடியாமல் போனதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று வேதனை தெரிவித்தார்.
குழந்தைகளிடம் கண்கலங்கிய கிம்
பின்னர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கிம் ஜாங் உன் சந்தித்தார். தந்தையை இழந்த சிறு குழந்தைகளை கட்டியணைத்து கண்கலங்கினார். அதனை பார்த்த மற்றவர்களும் அழுதனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications