தாய்மையைப் போற்றும் நார்வே.. 140வது இடத்தில் "அன்னை" இந்தியா!
நியூயார்க்: தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை கொண்ட நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணம், தாய்மார்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொருளாதார நிலை போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

முதலிடத்தில் நார்வே...
அதன்படி, தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை தன்னகத்தே கொண்டு நார்வே முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பின்லாந்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம்...
இந்த ஆய்வில், இதில் முதல் பத்து இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. 9-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் தான் ஐரோப்பாவை சேராத ஒரே நாடு.

அமெரிக்கா....
பிரான்ஸ் 23-வது இடத்திலும், இங்கிலாந்து 24-வது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா இரண்டு இடங்கள் சரிந்து 33-வது இடத்தில் இருக்கிறது.

140வது இடத்தில் இந்தியா...
இப்பட்டியலில் ஜிம்பாப்வே, வங்காள தேசம் மற்றும் ஈராக் நாடுகளுக்கு கீழே 140-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி இடத்தில் சோமாலியா...
வழக்கம் போல, இந்த ஆய்விலும் ஆப்பிரிக்க நாடுகளே மிக மோசமான நிலையில் உள்ளன. சோமாலியா கடைசி இடத்திலும் அதற்கு மேல் காங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவை உள்ளன.

ஆய்வு முடிவின் படி...
முதல் பத்து இடத்தில் இருக்கும் நாடுகளில் 298 தாய்மார்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையை இழக்கிறார். அதுவே கடைசி இடங்களில் இருக்கும் நாடுகளில் 8-ல் ஒருவர் தன்னுடைய குழந்தையை பறிகொடுக்கிறார் என ஆய்வு தெரிவிக்கின்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications