மாயமான மலேசிய விமான பகுதிகளை தேடும் நார்வே நாட்டு ஆட்டோ லைனர் கப்பல்
ஒஸ்லோ: காணமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் நார்வே நாட்டின் ஆட்டோ லைனர் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நார்வே கப்பல் தென் இந்திய கடல்பகுதிகளில் மாயமான விமானம் விழுந்ததாக சந்தேகப்படும் பகுதிகளில் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.சாட்டிலைட் மூலம் ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் கண்டறியப்பட்ட ஒரு சில உடைந்த பகுதிகளால் மலேசிய விமானம் ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதையடுத்து அந்த நார்வே கப்பல் மடகாஸ்கரில் இருந்து மெல்பர்ன் வரை ஆஸ்திரேலிய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப விழுந்துள்ள விமானத்தின் பாகங்களை தேடி பயணிக்கிறது.

சந்தேகத்திற்கு உள்ளான பகுதி உலகத்தில் உள்ள பாதுகாப்பற்ற பகுதிகளில் ஒன்றாகும்.அது பெர்த்தின் தென்மேற்கிலிருந்து 2,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பலின் பிரதிநிதியான கிறிஸ்டியன் ஓல்சென் கூறியபோது, "எங்களுக்கு ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து தேடுதலில் உதவ வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது.அவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பை நாங்கள் அளிப்போம்".முதன்முதலில் அந்த இடத்தை இந்த கப்பல்தான் அடைந்துள்ளது.இரண்டு நீண்ட பொருட்கள் தோராயமாக 24 மீட்டர் நீளமுள்ளவை மற்றும் சிறிய ஒன்று 5 மீட்டர் நீளமுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.மலேசிய விமானத்தை பற்றிய தகவல்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பல கதைகள் இவ்விமானத்தைப் பற்றி உலா வருகின்றன.
கிட்டத்தட்ட 26 நாடுகளில் இதற்கான தேடுதல் வேட்டை கடல் பகுதிகளில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications