Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து - கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் பழகக்கூடாது! ஆப்கனை அலறவைக்கும் தாலிபான்களின் புதிய சட்டம்

Subscribe to Oneindia Tamil

காபூல்: முஸ்லிம் மதத்தை சாராதவர்களிடம் நட்பாக பழக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கொண்டு வந்துள்ள சட்டம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆப்கானிஸ்தான்.. கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. அதாவது உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்க படைகள் 2021ல் வெளியேறின. இதையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

afghanisthan taliban

தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். இவர்கள். ஏற்கனவே கடந்த 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்தனர். இதையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போது 3 ஆண்டுகளாக தாலிபான்களின் ஆட்சியின் கீழ் தான் ஆப்கானிஸ்தான் உள்ளது.

3 ஆண்டுகள் ஆகியும் கூட ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த நாடு என்பதால் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தற்போது ஏராளமான மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். இருப்பினும் கூட இந்த காலக்கட்டத்தில் தாலிபான்கள் தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாதுது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். மேலும் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் கவிதைகள் படிக்கவும், பாடல்கள் பாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது. உறவு முறையில் வராத ஆண்களும், பெண்களும் எந்த காரணம் கொண்டும் பார்த்து கொள்ளக்கூடாது

முஸ்லிம் அல்லாத பெண்கள் முன்பாகவும் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க வேண்டும். தளர்வான அதேவேளையில் நீண்ட உடையை அணிய வேண்டும். வழிபாடுக்கு ஏற்றது போல் போக்குவரத்து நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்பட யாருடனும் நட்பு பாராட்டவும், உதவி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+