ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க ரெடி.. ரஷ்யா அதிரடி! விழி பிதுங்கும் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்நிலையில், ஈரானுக்கு பல நாடுகள் அணு ஆயுதங்களை கொடுக்க தயாராக இருக்கின்றன என்று ரஷ்யா கூறியிருக்கிறது.

ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ்தான் இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். "பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. அணுசக்திப் பொருட்களை செறிவூட்டுகிறோம் என்று நாம் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியும். எதிர்காலத்தில் அணு ஆயுத உற்பத்தி தொடரும்" என்று கூறியுள்ளார்.

Iran nuclear Putin

ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கிறது என்பதுதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. உலகின் தலைசிறந்த உளவு அமைப்பாக இருக்கும் சிஐஏ கூட, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.

இப்படி இருக்கையில்தான் கடந்த 13ம் தேதி, ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், ஈரான் கடுமையான பதிலடியை கொடுத்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சங்களை தாண்டி, சென்று தாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியிருந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதலை நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் போர் மூண்டது.

போர் விவகாரத்தில் மூன்றாம் நாடுகள் தொடக்கத்தில் தலையிடாமல்தான் இருந்தன. குறிப்பாக அமெரிக்கா இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்கப்பட்டவுடன், டிரம்ப் போர் குறித்து பேச தொடங்கினார். அவரது பேச்சில் அமைதிக்கான எந்த நோக்கமும் தெரியவில்லை. மாறாக, அதிகார தோரணை மட்டுமே இருந்தது.

"உங்கள் தலைவர் காமெனி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் பயப்பட வேண்டாம். நாங்கள் அவர்களை எதுவும் செய்ய மாட்டோம். ஈரான் உடனடியாக நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்று உத்தரவிட்டார். பதிலுக்கு ஈரான், "அதெல்லாம் முடியாது, ஆனதை பார்த்துக்கோ" என்கிற டோனில் பதில் சொன்னது. சர்வதேச அரங்கில், அமெரிக்கா பேசினால் எதிர்த்து கூட பேச பல அரபு நாடுகள் தயங்கும் நிலையில், ஈரான் மட்டும் இப்படி பேசியிருந்தது டிரம்ப்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனவே, ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். இதற்காக 4000 கி.மீ தொலைவிலிருந்து B-2 எனும் சிறப்பு விமானம் மத்திய கிழக்குக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விமானங்கள் இன்று அதிகாலையில் GBU-57 ரக குண்டை ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்களின் மீது வீசியிருக்கிறது. இதில் ஆய்வு மையங்கள் முற்றிலுமாக அழிந்துப்போனதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் சேதம் மிக குறைவான அளவில் மட்டுமே இருந்ததாக ஈரான் மறுத்துள்ளது.

அதேபோல ஆமெரிக்காவின் தாக்குதல் நிலைமையை மோசமடைய செய்துவிட்டது என்றும், இனி நடக்கும் விஷயங்களுக்கு அமெரிக்காதான் பொறுப்பு என்றும், நாங்கள் கடுமையான பதிலடியை கொடுப்போம் எனவும் ஈரான் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில்தான் ஈரானுக்கு அணு ஆயுதங்களை கொடுக்க பல நாடுகள் முன் வந்திருக்கின்றன என ரஷ்யா கூறியிருக்கிறது. உலகில் அதிக அளவில் அணு ஆயுதங்களை கொண்டிருப்பது ரஷ்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+