இதயத்தில் அடித்த இந்தியா.. சிதைந்த பாகிஸ்தானின் நூர் கான் விமான தளத்தை கைப்பற்றிய அமெரிக்கா? பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுடனான மோதலில் நம் நாடு துல்லியமாக தாக்கி பாகிஸ்தானின் முக்கிய நூர்கான் விமானப்படை தளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தான் பாகிஸ்தான் நம்மிடம் மோதலை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் தான் தான் நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் உருக்குலைந்த நூர் கான் விமான தளத்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 26 பேர் இறந்தனர். இதற்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது.

கடந்த மே 7 ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. அதன்பிறகு மே 10ம் தேதி பாகிஸ்தானின் விமானப்படை, ராணுவதளங்கள் என்று 12 இடங்கள் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டது.
இதில் முக்கிய விமானப்படை தளம் என்பது நூர்கான் விமானதளமாகும். இந்த விமானதளம் என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டியில் உள்ள சக்காலா பகுதியில் அமைந்துள்ளது. இது மிகவும் முக்கிய இடமாகும். இந்த விமான தளத்தின் அருகே தான் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இங்கிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் 10 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் அணுஆயுதங்களை மேற்பார்வையிடும் தலைமையகம் இதன் அருகே தான் உள்ளது. .
இதுதவிர இந்த விமான தளம் என்பது பாகிஸ்தானின் விமானப்படை பிரிவுகளான சி-130 ஹெர்குலஸ் மற்றும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் எல்-78விமானங்கள் இங்கிருந்து தான் செயல்படும். இதனால் தான் நம் நாடு இந்த விமானதளத்தை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதுதவிர இந்த விமானதளம் என்பது கட்டுப்பாட்டு மையமாகவும், பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையம், பிஏஎஃப் கல்லூரி சக்லாலா மற்றும் ஃபஸாயா இன்டர் கல்லூரி நூர் கான் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பிஏஎஃப் கல்லூரி சக்லாலா விமானப் பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது, அதே நேரத்தில் ஃபஸாயா இன்டர் கல்லூரி நூர் கான் வளாகத்தில் கூடுதல் கல்வி வசதிகளை வழங்கி வருகிறது.
அதேபோல் போர் விமானங்களுக்கு வழிக்காட்டும் Saab 2000 விமானம் இங்கிருந்து தான் இயக்கத்தை தொடங்கும். இந்த விமானதளம் தான் பாகிஸ்தானின் போர் விமானங்களின் இயக்கத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் நம் நாடு இந்த விமான தளத்தை குறிவைத்து துல்லியமாக தாக்கியது. இதில் சேதமடைந்துள்ள நூர்கான் விமானப்படை தளத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனை அந்த நாட்டின் டிபென்ஸ் எக்ஸ்பர்ட்டான இம்தியாஸ்குல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ‛‛பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படைத் தளம் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்குக் கூட நுழைய அனுமதி இல்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு விமானப்படை தளத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அமெரிக்க விமானங்கள் விமானப்படை தளத்தில் காணப்படுகிறது. அதன் செயல்பாடு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை'' என்றார். பாகிஸ்தானின் முக்கிய விமான தளமாக நூர்கான் விமான தளம் உள்ள நிலையில் அது அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக இம்தியாஸ் குல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications