30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் நியூசிலாந்து கடற்படை கப்பல்!!
Subscribe to Oneindia Tamil
பேர்ல் ஹார்பர்: நியூசிலாந்து கடற்படை கப்பல் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத எதிர்ப்பு விவகாரத்தில் நியூசிலாந்து கடற்படை கப்பல்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது இருநாட்டு கூட்டு கடற்படை பயிற்சிக்காக நியூசிலாந்து கடற்படை கப்பல் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பசிபிக் நாடுகள் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டு கூட்டுப் பயிற்சிக்கு வந்த போதுகூட பேர்ல் துறைமுகத்துக்குள் நியூசிலாந்து கடற்படை கப்பல் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications