அமெரிக்க ஷட் டவுண்: எதிர்க்கட்சி நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் - ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 5 நாட்களாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்திய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு செனட்சபை ஒப்புதல் கொடுத்து விட்டது. இதனை அடுத்து சமீபத்தில் இத்திட்டம் உள்பட பல திட்டங்களின் நிதி ஒதுக்கீடு மசோதா பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால் ஒபாமா திட்டத்தை அது முடக்கியது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி, ஆளும்கட்சி இடையேயான மோதலில் அமெரிக்காவில் ஷட் டவுண் அறிவிக்கப் பட்டது. அதன்படி, அத்தியாவசியம் இல்லாத அரசு நிறுவனங்களான தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்பட பல நிறுவனங்கள் கடந்த 1-ந்தேதி முதல் மூடப்பட்டது. சுமார் 10 லட்சம் ஊழியர்கள் சம்பளம் இன்றி கட்டாய விடுப்பில் சென்றனர். இதன் மூலம் வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலை அங்குக் காணப்படுகிறது.
ஒபாமாவின் நிர்வாகம் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நேற்று ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில் இந்த நிதி மசோதா பிரச்சினையில் எதிர்க்கட்சியின் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் என்று திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேலும், அவர் தனது உரையில் தெரிவித்திருப்பதாவது.....

தொடரும் வேதனை....
அரசாங்க நிறுவனம் மூடல் அறிவிப்பால் மக்களின் இதயத்தில் வேதனை குடிபுகுந்து விட்டது.

கல்வி பாதிப்பு....
இதனால் ஏராளமானோரின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாக எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தங்களின் துயர நிலையை எடுத்துக்கூறி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

பிணைத்தொகை....
வேலை பெறுவதற்காக எந்த ஒரு அமெரிக்கரும் பிணைத்தொகை வழங்க மாட்டார்கள். அதுவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பொருந்தும். அதுபோல அரசாங்கம் மீண்டும் இயங்க நான் ஏன்? பிணைத்தொகை பரிமாறிக்கொள்ள வேண்டும். நெருக்கடியை தீர்க்க நான் யாருக்கும் பிணைத்தொகை கொடுக்க தயாராக இல்லை.

பொதுமக்கள் பாதிப்பு....
இந்த நிதி பிரச்சினையால் நாடு கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலைமையை எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு....
எனவே தனித்தன்மையை பார்க்காமல், நாட்டு நலனை கருத்தில் கொண்டு நிதி மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என ஒபாமா தெரிவித்தார்.

மக்கள் கடிதங்கள்...
அத்துடன் பொதுமக்கள் அனுப்பிய சில கடிதங்களையும் அப்போது அவர் வாசித்துக் காட்டினார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications