அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ், மலாலாவுக்கு ஒபாமா வாழ்த்து
வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒபாமா கூறியுள்ளதாவது: மலாலாவையும், கைலாஷ் சத்யார்த்தியையும் நானும், அமெரிக்க மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். மானுடத்தின் மதிப்பை உயர்த்த பாடுபடும் ஒவ்வொருவருக்கும் இந்த விருது வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இளம் வயதினரின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் காக்க வேண்டிய அவசர தேவை இருப்பதை உணர்ந்து நோபல் பரிசு கமிட்டி, இந்த விருதை மலாலாவுக்கும், கைலாஷுக்கும் அளித்துள்ளது.

சிறுவர்களுக்கு கடவுள் கொடுத்த திறமையை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மலாலாவும், கைலாஷும் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்கள். வெறும் பதினேழே வயதில், உலகிலுள்ள மக்களை தன்பக்கம் திருப்பியவர் மலாலா. தாலிபான்கள் அவரது குரலை ஒடுக்க முற்பட்டபோது, தனது வலிமையால், அவர்களின் கொடுமைகளுக்கு பதிலடி கொடுத்தவர் மலாலா.
கைலாஷ் சத்யார்த்தியை பொறுத்தளவில், தனது மொத்த வாழ்நாளையும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார். அவருக்கு இதுவரை எந்த விருதும் கிடைக்கவில்லை என்பதை வைத்து அவரது பணியை மதிப்பிடக்கூடாது. ஆனால் கைலாஷால் விடுதலையும், மரியாதையும் பெற்று வாழும் பல ஆயிரம் பேரின் நன்றியைத்தான், இவருக்கான அளவுகோலாக பார்க்க வேண்டும்.

மலாலாவும், கைலாஷும், தங்களது உயிரையை பணையம் வைத்து வருங்கால சந்ததிக்காக உழைத்துள்ளனர். இருவருமே வெவ்வேறு நாடுகளில் இருந்தும், வெவ்வேறு மதங்களில் இருந்தும், வெவ்வேறு தலைமுறையிலும் இருந்து வந்தவர்கள். ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி. ஆனால் இருவருமே மனிதர்களுக்கான குறைந்தபட்ச மரியாதை, நீதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். இவ்வாறு ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications