ஈஸ்டர் பிரார்தனையை பாதியில் விட்டு ஒபாமாவை பார்க்க ஓடிய மக்கள்
வாஷிங்டன்: ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள தேவாலயம் சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கைகுலுக்க மக்கள் போட்டிபோட்டதால் சர்ச்சில் பிரார்தனை பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஈஸ்டர்
இயேசு உயிர்த்தெழுந்த தினமாக ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டுகிறார்கள். நேற்று உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் கொண்டாடப்பட்டது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னிலுள்ள 19வது தெரு பாப்டிஸ்ட் சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்ச்சுக்குபோன ஒபாமா குடும்பம்
இதி்ல் பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல், மற்றும் இரு மகள்களும் தேவாலயம் சென்றனர். அதிபரை பார்த்த மகிழ்ச்சியில் பிராத்தனையை அப்படியே பாதியில் விட்டுவிட்டு தேவாலயத்தின் உள்ளே இருந்த பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர்.

ஸ்மைல் ப்ளீஸ்
ஒபாமாவிடம் கைகுலுக்கியபடி பிராத்தனைக்கு வந்த மக்கள் போட்டோக்களை எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்புத்தொல்லையை கடந்து ஒருவழியாக அதிபர் குடும்பம் தேவாலயத்திற்குள் வந்தது. இதன்பிறகுதான் மீண்டும் பிராத்தனை தொடங்கியது.

சமாளித்த போதகர்
பிரார்த்தனை பாதியில் நின்றதால், தேவாலயத்தின் போதகர் டெர்ரிக் ஹர்கின்சுக்கு தர்ம சங்கடமாகப்போய்விட்டது. அதே நேரம், அதிபர் ஒபாமாவை பார்க்க சென்ற மக்களையும் கண்டிக்க முடியாது என்பதால் சமாளித்துக்கொண்ட போதகர், "இந்த தேவாலயத்தில் இவ்வளவு கூட்டம் இருந்ததே எனக்கு இப்போதுதான் தெரிகிறது" என்று கூறி ஜோக் அடித்தார். இதன்பிறகு பிராத்தனையை போதகர்கள் தொடர்ந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications