6 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் "சொந்த வீடு" கட்டிய அமெரிக்கா அதிபர் ஒபாமா!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமா 6 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் கணக்கு துவங்கி உள்ளார். அவரை சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் தகவல் தொடர்பிற்கு ட்விட்டரை பயன்படுத்தி வந்தது. ஆனால் அதிபர் ஒபாமா ட்விட்டரில் இணையாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில்தான் அதிபர் ஒபாமா ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ளார்.
Hello, Twitter! It's Barack. Really! Six years in, they're finally giving me my own account.
— President Obama (@POTUS) May 18, 2015 ட்விட்டரில் அவர் இணைந்த ஒரு மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அவரை ஃபாலோ செய்தனர்... தற்போது சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்..
ட்விட்டரின் புகைப்படமாக அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்ற செல்மா சிவில் உரிமைகள் பேரணியின் 50ஆம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படத்தை ஒபாமா வைத்துள்ளார். தன்னுடைய முதல் ட்வீட்டில் ஹலோ ட்விட்டர்! இது பாரக். உண்மையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் எனக்கு சொந்தமாக கணக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இடத்தில் அப்பா கணவன் மற்றும் அமெரிக்காவின் 44-வது அதிபர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் போன்றோர் ட்விட்டரில் ஒபாமாவை பின் தொடர்ந்துள்ளனர். வருகிற அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஹிலாரி கிளிண்டன் மட்டும் அவரை பின் தொடரவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications