திரிபோலியில் 11 விமானங்கள் மாயம்: தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என அமெ. எச்சரிக்கை
திரிபோலி: லிபியாவின் திரிபோலி விமான நிலையத்தில் சமீபத்தில் 11 விமானங்கள் மாயமாகியுள்ளதாகவும், அவற்றை தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 34 ஆண்டுகளாக கடாபியின் சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுக்களின் உதவியுடன் சர்வாதிகார ஆட்சியை ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேசிய இடைக்கால பேரவை ஆட்சி நிறுவப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு அங்கு புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மூன்றாண்டுகளாக லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள விமான நிலையம் ஜிண்டான் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
சண்டை...
இந்த விமானநிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் மிஸ்ரதா இஸ்லாமிய போராட்டக் குழு கடந்த ஒரு மாத காலமாக ஜிண்டான் தீவிரவாதக் குழுவுடன் சண்டையிட்டு வருகிறது.
சொத்துக்கள் சேதம்...
இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். விமான நிலையமும் ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விமான நிலைய சொத்துகளும் சேதம் அடைந்தன.
விமானங்கள் மாயம்...
அதனைத் தொடர்ந்து தற்போது இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டினை மிஸ்ரதா இஸ்லாமிய தீவிரவாதக்குழு கைப்பற்றி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த விமான நிலையத்திலிருந்த 11 பயணிகள் விமானங்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தாக்குதல் எச்சரிக்கை...
மாயமான அந்த விமானங்களைக் கொண்டு தீவிரவாதிகள், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவையே உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலை போன்ற தாக்குதல்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications