For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாடா.. சவுதி அரம்கோ சொன்ன நல்ல சேதி.. நம்ம பாக்கெட்டுக்கு பாதகம் இல்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி.. உலக நாடுகள் அதிர்ச்சி.. பின்னணி!

    ஜெட்டா: செப்டம்பர் இறுதிக்குள் சவுதி அரம்கோ, தனது உற்பத்தி திறனை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமின் நாசர் தெரிவித்துள்ளார்.

    சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் கீழ் உள்ள, அப்கைக் மற்றும் குரைஸ் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலால், அவற்றின் உற்பத்தித் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    எனவே, இந்த தாக்குதலைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% அதிகரித்துள்ளது.

    புதிய மோட்டார் வாகன சட்ட அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு.. நாளை நாடு முழுவதும் லாரிகள் ஓடாதுபுதிய மோட்டார் வாகன சட்ட அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு.. நாளை நாடு முழுவதும் லாரிகள் ஓடாது

    திட்டமிட்ட தாக்குதல்

    திட்டமிட்ட தாக்குதல்

    இதுபற்றி ஜெட்டாவில், அமின் நாசர் கூறுகையில், எங்கள் ஆலைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அதிலிருந்து, மீண்டுவரும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. உலகிற்கு கச்சா எண்ணை விநியோகத்தை தடை செய்யும் நோக்கத்தோடுதான் இந்த தாக்குதல்கள் நடைப்பெற்றுள்ளன.

    பெரிய உற்பத்தி பிரிவு

    பெரிய உற்பத்தி பிரிவு

    குரைஸில் ஆலையில், தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளது. அதேநேரம், ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணை உற்பத்தி செய்ய கூடிய அப்கைக் ஆலை, அதன் முழு உற்பத்தியை செப்டம்பர் இறுதிக்குள் மீண்டும் கொண்டுவந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விலையேற்றம் தவிர்க்கப்படும்

    விலையேற்றம் தவிர்க்கப்படும்

    சவுதி அரேபியா தாக்குதலால், உலகளாவிய அளவில் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவில் லிட்டருக்கு ரூ.5 வரை விலை ஏற்றம் இருக்க கூடும் என்றும், செய்திகள் வெளியான நிலையில், சவுதி அரேபிய அதிகாரியின் இந்த பேட்டி, நிம்மதியை வரவழைத்துள்ளது.

    தாக்குதல்

    தாக்குதல்

    ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளில்லா விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை வீசியும், குண்டு மழை பொழிந்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால், அரம்கோவின் எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கில் தீப்பற்றி வானை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Saudi Aramco will be able to fully restore production capacity by the end of September, says the company’s president and CEO Amin Nasser
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X