தலிபான்கள் தீவிரவாத இயக்கமா இல்லையா.. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?.. ஒமர் அப்துல்லா கேள்வி
காபூல்: தலிபான்கள் தீவிரவாத இயக்கமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, தலிபான்கள் அச்சம் உள்ளிட்டவைகளால் அங்குள்ள மக்கள் அகதிகள் போல் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

மேலும் சிலர் மீட்பு விமானங்களில் கூட்ட நெரிசலால் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு அண்டைய நாடுகளுக்கு தஞ்சமடைய சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கத்தார் நாட்டின் தோஹா நகரில் தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் மித்தல் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதர் வலியுறுத்தியதாகவும் அதற்கு தலிபான் உத்தரவாதம் அளித்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தலிபான் அமைப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனவே அந்த அமைப்பு தீவிரவாத இயக்கமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஒரு வேளை அது தீவிரவாத இயக்கமாக இருந்தால் ஐநாவிடம் சொல்லி அந்த அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க சொல்ல வேண்டும்.
இதன் மூலம் அவர்களது முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மீண்டும் இயங்கும். நாமும் அவர்களை தீவிரவாத இயக்கமாக பார்க்க மாட்டோம். ஒரு வேளை தலிபான்கள் தீவிரவாத இயக்கம் என மத்திய அரசின் நிலைப்பாடாக இருந்தால் தலிபான்களுக்கும் மற்ற தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதையும் கூற வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications