For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பாடம் எடுப்பது முரண்பாடாக உள்ளது' சாடும் இந்தியா

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ஸ்ரீனிவாஸ் கோத்ரூ, 'சிறுபான்மையின மக்களின் உரிமைகளை கடுமையாக மீறும் பாகிஸ்தான், சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து பாடம் எடுப்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளது' என்றார்.

பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் வன்முறைகளும் துன்புறுத்தல்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பான (IFFRAS)-இன் தகவல் படி பாகிஸ்தான் பழமைவாத அடிப்படையை நோக்கி செல்கிறது.

3 லட்சம் வீரர்கள் “ரெடி”... “அணு ஆயுதமும்” இருக்கு.. மிரட்டும் ரஷ்யா - உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம் 3 லட்சம் வீரர்கள் “ரெடி”... “அணு ஆயுதமும்” இருக்கு.. மிரட்டும் ரஷ்யா - உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம்

 சிறுபான்மையினர்களின் நிலைமை

சிறுபான்மையினர்களின் நிலைமை

இந்த அறிக்கையில், 'அங்கு வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர்களின் நிலைமை குறிப்பிடும்படியாக மோசம் அடைந்துள்ளது. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் செய்யப்படுவதாகவும் அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கு எதிராக சிறுபான்மையின பெண்களின் குடும்பத்தினர் சட்ட ரீதியாகவும் போராட முடியாத சூழல் நிலவுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் மனித உரிமை மீறல்

காஷ்மீரில் மனித உரிமை மீறல்

பாகிஸ்தானில் மத சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நிலவும் அவல நிலையை இந்த அறிக்கை வெளிக்காட்டும் படியாக உள்ள சூழலில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, 'இந்தியா இந்துக்களின் மேலாதிக்க நாடாக மாறிவருவதாகவும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும்' பேசியிருந்தார்.

முரண்பாடாக உள்ளது

முரண்பாடாக உள்ளது

இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக(UNES) கூட்டத்தில் இந்தியாவுக்கான இணை செயலாளர் ஸ்ரீனிவாஸ் கோத்ரு பேசினார். அப்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ஸ்ரீனிவாஸ், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை கடுமையாக மீறும் பாகிஸ்தான், சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து பாடம் எடுப்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என்றார்.

வேடிக்கையாக உள்ளது

வேடிக்கையாக உள்ளது

சிறுபான்மையினர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய இந்திய அதிகாரி ஸ்ரீனிவாஸ் கோத்ரு மேலும் கூறியதாவது: சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவது வேடிக்கையாக உள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதால், அது குறித்த தரவுகளை மறைக்கும் நோக்கில் வெளியிடாமல் நிறுத்திவைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வியப்பளிக்கிறது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு மீறிய நீண்ட வரலாறை கொண்டது பாகிஸ்தான். சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அஹ்மதியர்கள் பாகிஸ்தானின் உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் போன்ற மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்'' என்றார்.

English summary
Srinivas Kodhru, who severely criticized Pakistan's Foreign Minister Bilawal Bhutto Zardari, said, "It is completely ironic that Pakistan, which severely violates the rights of minorities, should learn about the rights of minorities."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X