உடனே போங்க.. 2 ராட்சசன்களை அனுப்பி வைத்த அமெரிக்கா.. செங்கடல் சிவக்க போகுது.. அதிரும் உலக நாடுகள்
நியூயார்க்: அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் அமெரிக்கா மூக்கை நுழைத்து வரும் நிலையில், அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் உள்ள இராணுவத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று அவசரமாக அதிபர் பிடன் வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸ் உடன் ஆலோசனை செய்தார்.

உலகப்போர் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்புக் குழுவைச் சந்தித்தார். அங்கே அவசர அவசரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். ஈரான் இஸ்ரேல் மீதோ, அமெரிக்க ராணுவ மையங்கள் மீதோ போர் தொடுத்தால் அது கண்டிப்பாக உலகபோராக மாறும்.
இதனால் என்ன செய்யலாம்.. போர் வரும் முன் முன்கூட்டியே தாக்குதல் நடத்தலாமா அல்லது ஈரான் தாக்கிய பின் பதில் தாக்குதலை தொடுக்கலாமா என்று ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கூட்டு தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு தாங்கள்தான் காரணம் என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதை எல்லாம் மனதில் வைத்தே தற்போது ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
அமெரிக்க படைகள்: அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது.
யுஎஸ்எஸ் லாபூன் மற்றும் யுஎஸ்எஸ் கோல் ஆகிய இரண்டு அமெரிக்க நாசகாரக் கப்பல்கள் தற்போது செங்கக்கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓமன் வளைகுடாவிலிருந்து செங்கடலுக்கு இஸ்ரேலின் திசையில் இந்த கப்பல்கள் நகர்த்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று காலை வரை ஓமன் வளைகுடாவில் தங்கியுள்ளது.
விரைவில் இதுவும் செங்கக்கடலுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கக்கடல் என்பது சவுதிக்கு அருகே இருக்கும் கடல். இங்கிருந்து பாலஸ்தீனத்தை தாக்க முடியும் . அதேபோல் ஈரான் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியும்.
ஏற்கனவே அமெரிக்கா - ஏமன் இடையே செங்கக்கடலில் அவ்வப்போது போர், தாக்குதல் நடக்கிறது. இந்த போருக்கு இடையில் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் செங்கக்கடலுக்கு சென்றுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் போது,.. இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க அமெரிக்கா இந்த படை கப்பலை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications