ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து...நம்பிக்கை அளித்த மேலும் ஒரு மருந்து!!
மாஸ்கோ: ரஷ்யாவின் அரசுத்துறை நிறுவனமான வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி (வெக்டர்) கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்துவதற்கு பாதுகாப்பானது என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, மனிதருக்கு செலுத்தி சோதனை செய்துள்ளது.
Recommended Video
இந்த மையத்தின் இயக்குனர் ரினாட் மாக்ஸ்யுதோவ் அளித்திருக்கும் பேட்டியில், ''வெக்டர் மையம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மனிதருக்கு செலுத்துவதற்கு முன்பு சோதிக்கப்பட்டதில் பாதுகாப்பனது என்பது தெரிய வந்துள்ளது. இரண்டாவது முறையாக தன்னார்வலர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். 21 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு மூன்று, ஆறு, ஒன்பதாவது மாதங்களில் வரவழைத்து சோதித்து பார்க்கப்படுவார்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''வரும் செப்டம்பர் மாதத்துடன் பரிசோதனை முடிந்துவிடும். அக்டோபர் மாதம் மருந்தை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். நவம்பரில் பெரிய அளவில் இந்த மருந்து தயாரிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இறுதிக் கட்ட சோதனையில் இருக்கிறது. இந்த மருந்தை ரஷ்யா கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி பதிவு செய்துள்ளது. ரஷ்ய அரசுத்துறை தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம்தான் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு விட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். மருந்து தயாரிப்புப் பணிகளை ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கிவிட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த தடுப்பு மருந்தை தனது மகளும் போட்டுக் கொண்டார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications