ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
டோக்கியோ: ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. இக்கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பயணிகளுடன் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது. கொரோனா வைரஸ் தாக்குதலால் இக்கப்பல் ஜப்பான் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இக்கப்பலில் பயணித்தவர்களில் 138 பேர் இந்தியர்கள். இவர்களில் முதலில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து 7 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு இந்தியருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இக்கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்திருக்கிறது. 8 இந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சொகுசு கப்பலில் சுமார் 600க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications