1000 வார்த்தைகள்.. ஒற்றை புகைப்படம்.. மீண்டும் டிரென்ட்டாகும் பழைய போட்டோ.. போரை நிறுத்துமா?

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி இனப்படுகொலை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 4 நாட்களாக போரிட்டு வருகிறது. இதுவரை உக்ரைன் நாட்டின் 4 முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த போரில் 4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் கூறுகிறது.

மேலும் ரஷ்யாவின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்களை அழித்துவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைனின் கார்கீவ் நகரை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால் அவற்றை ரஷ்யாவிடம் இருந்து மீட்டு விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீது தடை

ரஷ்யா மீது தடை

இந்த நிலையில் போரை நிறுத்தக் கோரி ரஷ்யாவுக்கு பொருளாதார தடை, தங்கள் வான் எல்லையில் ரஷ்ய விமானம் பறக்க தடை, பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட ரஷ்யர்கள் விளம்பரம் செய்ய தடை என பல தடைகளை விதித்து ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டாலும் போர் நடவடிக்கையை ரஷ்யா தீவிரப்படுத்திக் கொண்டே வருகிறது.

இனப்படுகொலை

இனப்படுகொலை

கிட்டதட்ட இனப்படுகொலை என குறிப்பிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போர் நடவடிக்கையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுவரை உக்ரைனிலிருந்து 3.68 லட்சம் மக்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. போரை நிறுத்துங்கள் என குழந்தைகள் கையில் பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

உக்ரைன் நாட்டு ஆண்கள்

உக்ரைன் நாட்டு ஆண்கள்

உக்ரைன் நாட்டு ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பதால் அவர்கள் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பிரிய மனமில்லாமல் வேறு நாட்டில் தஞ்சம் அடையும் போது அவர்கள் கலங்குவது பார்ப்போரை கலங்கடிக்கிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Ukraine crisis: ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை.. தந்தையை விட்டு விடைபெறும் மகளின் உருக்கமான வீடியோ
    ட்விட்டரில் டிரென்டிங்

    ட்விட்டரில் டிரென்டிங்

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆண் ஒருவர் உக்ரைன் கொடியையும் பெண் ஒருவர் ரஷ்ய கொடியையும் அணிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்புடன் தழுவிக் கொள்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது போர், மோதலை தாண்டி அன்பும், அமைதியும் வெல்லும் என நம்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.

    1000 வார்த்தைகள்

    1000 வார்த்தைகள்

    1000 வார்த்தைகளை இந்த புகைப்படம் பேசுவதாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள், நெகிழ்கிறார்கள். அதே வேளையில் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதில்லை. கட்நத 2019ஆம் ஆண்டு போலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டும் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டபோது இரு நாடுகளிடையே பதற்றம் நிலவியது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போதும் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+