Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய சதியில் பாகிஸ்தான்? எல்லையில் திடீரென குவிக்கப்படும் ஆயுதங்கள்.. அலர்ட் செய்த உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடியில் இருந்து இன்னும் அந்த நாடு முழுமையாக மீண்டு வரவில்லை. இதற்கிடையே தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. மீண்டும் வாலாட்டினால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு கூறியுள்ளது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ட்ரோன் எதிர்ப்பு ஆயுதம் உள்பட பலவற்றை குவித்து வருவதாக நம் உளவுத்துறை கண்டுபிடித்து அலர்ட் செய்துள்ள நிலையில் ‛ஆபரேஷன் சிந்தூர் 2.0' வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட பல இடங்களில் நம் நாட்டின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின.

pakistan india operation sindoor

இதில் பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. ரேடார் சிஸ்டம்கள் நொறுக்கப்பட்டதோடு, விமானப்படை தளம், ராணுவ தளம் சிதைக்கப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது.

தற்போது இருநாடுகள் இடையே அமைதி நிலவி வருகிறது. இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு வார்னிங் செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பயந்து போய் உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே சில முக்கிய வேலைகளை செய்து வருகிறது. நம் நாட்டின் தாக்குதலை தடுக்கும் வகையில் சில பணிகளை செய்து வருகிறது. இதனை நம் நாட்டின் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் தனது எல்லை கட்டுப்பாட்டில் கோட்டின் அருகே C UAS எனும் வான்வெளி தாக்குதலை தடுக்கும் சாதனத்தை நிறுவி உள்ளது. இந்த சாதனத்தை பாகிஸ்தானின் ராவலாகோட், கோட்லி மற்றும் பீம்பேர் உள்ளிட்ட செக்டாரில் நிறுவி உள்ளது. 30-க்கும் மேற்பட்ட பிரத்யேக ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டம்களை பாகிஸ்தான் நிறுவி உள்ளது.

முர்ரியை தலைமையிடமாக கொண்ட 12வது இன்ஃபேன்ட்ரி டிவிஷன் மற்றும் கோட்லி-பிம்பேர் பகுதியில் படைப்பிரிவுகளை கட்டுப்படுத்தும் 23வது இன்ஃபேன்ட்ரி டிவிஷன் உள்ளிட்டவற்றின் மேற்பார்வையில் இந்த சிஸ்டம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் என்பது எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே வான்வெளி கண்காணிப்பு மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும் போர் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் உள்ளது.

மேலும் ஸ்பைடர் கவுண்ட்டர் - யுஏஸ் சிஸ்டமையும் பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தஅமைப்பு என்பது ரேடியோ அதிர்வெண் மற்றும் ட்ரோனின் திசையை கண்டுபிடிக்கும் டெக்னிக்ஸை கொண்டுள்ளது. அதோடு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே ட்ரோன் வருவதை இதனால் கண்டுபிடிக்க முடியும்.

அதேபோல் Safrah anti-UAV jamming gun பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ட்ரோன் எதிர்ப்பு பணிக்கு பெயர் பெற்றது. ட்ரோன் கடடுப்பாட்டு, ஜிபிஎஸ் லிங்கை இதனால் சீர்க்குலைக்க முடியும். இதனை தோளில் வைத்தும் கூட பயன்படுத்த முடியும். இதன் ரேஞ்ச் 1.5 கிலோமீட்டர் தொலைவாகும்.

அதேபோல் தாழ்வாக பறக்கும் ட்ரோன்களை கண்டுபிடிக்கவும் Oerlikon GDF 35 mm twin-barrel anti-aircraft guns, Anza Mk-II and Mk-III man-portable air defence systems (MANPADS) உள்ளிட்டவை நிறுவப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உளவுத்துறையின் இந்த அலர்ட் நடவடிக்கையால் நம் நாடும் சுதாரிக்க தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் தனது நாட்டின் பாதுகாப்புக்காக இதனை செய்கிறதா? இல்லாவிட்டால் நம் நாட்டை சீண்டிப்பார்க்க தயாராகி வருகிறதா? என்பதை உளவுத்துறை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். பாகிஸ்தானின் இந்த செயலால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+