டிரம்பை விடுங்க.. இந்தியா - பாக்., போரை நிறுத்த நாங்கள் தான் பேசினோம்.. சீனா சொன்னதுமே மத்திய அரசு பதிலடி
பெய்ஜிங்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' வழியாக நம் நாடு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் தான், போரை நிறுத்த நாங்கள் தான் மத்தியஸ்தம் செய்தோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இதனை நம் நாடு ஏற்க மறுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
மே 7 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது. நம் நாட்டில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணைகள் பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தானின் ரேடார் அமைப்பு, ராணுவ மற்றும் விமான தளங்களை அழித்தது.
பதிலுக்கு பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஆனால் அந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டில் அடியை தாங்க முடியாமல் மே 10ம் தேதி பாகிஸ்தான் சரணடைந்தது. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குநர், நம் நாட்டின் ராணுவ நடவடிக்கை இயக்குநரை தொடர்பு கொண்டு போரை நிறுத்தும்படி கெஞ்சினார். இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ததாக தெரிவித்துள்ளது. சீனாவின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து தான் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
‛‛இந்தியா - பாகிஸ்தான் மோதல் உள்பட பல உலகளாவிய மோதல்களில் சீனா மத்தியஸ்தம் செய்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்த ஆண்டில் தான் போர்களும், எல்லை தாண்டிய மோதல்களும் அதிகரித்துள்ளது. நிலையான அமைதியை உருவாக்க சீனா நடுநிலை வகித்ததோடு, பிரச்சனைகளின் அறிகுறி மற்றும் மூல காரணங்களை அறிந்து தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது'' என்று கூறினார்.
இதனை நம் நாடு ஏற்க மறுத்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் இருநாடுகளின் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தான் முடிவுக்கு வந்தது. இதில் 3வது நாட்டின் தலையீடு என்பது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறி வருகிறார். இந்தியா , பாகிஸ்தான் போர் அணுஆயுத போராக வெடித்திருக்கும். ஆனால் நான் தான் வர்த்தகத்தை சுட்டிக்காட்டி இருநாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தினேன் என்று மேடைக்கு மேடை கூவிவருகிறார். டிரம்பின் கூற்றை நம் நாடு பலமுறை புறக்கணித்துவிட்டது
‛‛அமெரிக்கா உள்பட எந்த நாடுகளின் தலையீடும் இல்லாமல் மோதல் நிறுத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் பேச்சுவார்த்தையில் தான் மோதல் நிறுத்தப்பட்டது'' என்று பலமுறை நம் நாடு சொல்லிவிட்டது. ஆனால் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. இப்போது திடீரென்று டிரம்பின் பாணியில் சீனா உள்ளே வந்து இருநாடுகளின் போரை நிறுத்த நாங்கள் தான் மத்தியஸ்தம் செய்தோம் என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் சீனா மத்தியஸ்தம் செய்யவில்லை. மாறாக பாகிஸ்தானுக்கு உதவி செய்தது. பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து தான் ராணுவ தளவாடங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ரேடார் உள்பட பலவற்றை சீனா, பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ துறையில் நெருங்கிய கூட்டாளிகள்.
இப்படியான சூழலில் தான் சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கிய தளவாடங்களை நம் நாடு தாக்கி அழித்ததால் பாகிஸ்தான் தடுமாறியது. இந்த வேளையில் நம் நாட்டின் இருந்து பாகிஸ்தானை நோக்கி செல்லும் ஏவுகணைகளின் திசைகளை சீனா கண்காணித்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு சொன்னதாக ஒரு தகவல் உள்ளது. இப்படி பாகிஸ்தானுக்கு உதவி செய்த சீனா வெட்கமே இல்லாமல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது மத்தியஸ்தம் செய்ததாக கூறியிருப்பது நகைப்புரியதாக இருக்கிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications