மோடி பெயரை சொல்லக் கூட பயப்படும் பாகிஸ்தான் பிரதமர்.. அந்த நாட்டு எம்.பி.யே ஆவேசம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை. அவர் மோடியின் பெயரை கூட சொல்ல பயப்படுகிறார் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பி ஷாகித் கதாக் ஆக்ரோஷமாக பேசிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நம் நாடு அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் மூக்கு உடைந்தது.

நேற்று இரவில் பாகிஸ்தான் சார்பில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களை குறிவைத்து ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டது. அதனை நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் கண்டுபிடித்து வானிலேயே இடைமறித்து அழித்தது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பயங்கரவாதிகளை வளர்த்து வேடிக்கை பார்த்த பாகிஸ்தான் இப்போது பரிதாப நிலையில் உள்ளது. நம் நாட்டின் பதிலடி தாக்குதலில் தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளார். அவரை அந்த நாட்டு மக்கள், எம்பிக்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். தற்போது பாகிஸ்தானில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இன்று நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் மீது நம் நாடு தாக்குதல் நடத்தும் விவகாரம் பற்றிய விவாதத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் கையில் எடுத்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தியாவின் தாக்குதலை தடுப்பதில் பாகிஸ்தான் அரசு முறையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினர். அப்போ முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பிடிஐ எனும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த கைபர் பத்துன்வா தெற்கு பிராந்தியத்தை சேர்ந்த எம்பி ஷாகித் கதாக் ஆக்ரோஷமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக எம்பி ஷாகித் கதாக் பேசும்போது கூறியதாவது: பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஒரு கோழை. அவர் இந்தியாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எல்லையில் நிற்கும் பாகிஸ்தான் வீரர்கள் அரசு துணிச்சலுடன் இந்தியாவை போராடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் உங்கள் தலைவர் (ஷெபாஸ் ஷெரீஃப்) மோடியின் பெயரை உச்சரிக்க முடியாத கோழையாக இருக்கிறார். இப்படி இருக்கும்போது எல்லையில் போராடும் ராணுவ வீரர்ளுக்கு என்ன செய்தியை கூறுவீர்கள்?
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இப்படியான விமர்சனங்களை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த 7 ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தயக்கத்துடனும், நடுக்கத்துடனும் பேசினார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் பாகிஸ்தான் மக்கள் அவரை ட்ரோல் செய்தனர். ஷெபாஸ் ஷெரீஃப் கான்பிஃடென்ட்டாக இல்லை. அவர் வீக்காக இருக்கிறார் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications