அமெரிக்க ஜனாதிபதி போட்டியாளர்களில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு அதிகரிப்பு
வாஷிங்டன்: குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதை உட்கட்சி தேர்தல் நடத்தி தீர்மானிக்க உள்ளனர். ஒரு டஜனுக்கும் மேலான தலைவர்கள் உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் இருக்கும் நிலையில், எதிரணியில் ஹிலாரி கிளிண்டன் எந்த போட்டியும் இல்லாமல் அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக ஆதரவு பெற்று வந்தார்.
குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருமளவில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை ஹிலாரி க்ளிண்டனுக்குக் கிடைக்கும் என்று பரவலாகப் பேசப்படுகின்றது.

இந்த நிலையில் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் 74 வயது பெர்னி சான்டர்ஸ்க்கு நியூஹாம்ஷையர் மற்றும் ஐயோவா மாகாணங்களில் ஹிலாரிக்கு இணையான ஆதரவு கிடைத்திருந்தது.
ஹிலாரி க்ளிண்டன் இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். முன்னதாக 2008ம் ஆண்டுக்கான தேர்தல் போது, ஹிலாரி தான் ஜனாதிபதி வேட்பாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல் தடவை செனட்டராக இருந்த பராக் ஒபாமா, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிலாரியை விட அதிக ஆதரவு பெற்று ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றி பெற்று இரண்டு தடவை அதிபராகவும் ஆகிவிட்டார்.
ஒபாமாவைப் போல், முதல் தடவையாக வெர்மாண்ட் மாகாண செனட்டராக வெற்றி பெற்ற பெர்னி சான்டர்ஸ், களத்தில் குதித்த போது வெறும் பரபரப்புக்காக போட்டியிடுகிறார் என்று தான் கருதப்பட்டது. ஆனால் அவர் ஹிலாரி கிளிண்டனுக்கு இணையான செல்வாக்கை பெற்றிருந்தார்.
இந்நிலையில், சிஎன்என்/ஓஆர்சி நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு ஹிலாரிக்கு ஆதரவான அம்சங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.
வெளியுறவுத்துறை கொள்கைகளில் 72 சதவீதம் மக்கள், ஹிலாரிக்கும், 15 சதவீதம்பேர் பெர்னிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் விவகாரத்திலும் ஹிலாரிக்கு 63 சதவீதம், பெர்னிக்கு 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஹிலாரிக்கும் நடுவேயான தனிப்பட்ட கருத்துக்கணிப்பில், 2 சதவீத ஆதரவை மட்டுமே ஹிலாரி அதிகம் பெற்றுள்ளார். டிரம்புக்கு 47 சதவீதம், ஹிலாரிக்கு 49 சதவீதம்பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெட் க்ரூஸ், ஹிலாரியைவிட 2 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளதும் இதில் குறிப்பிடத்தக்கது. எனவே குடியரசு தலைவர் பதவி வேட்பாளர்கள் நடுவே சரிநிகர் மோதல் நிலவி வருவது உறுதியாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications