For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

89 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த "ஷாக்கிங்" துப்பாக்கிச் சூடு இதுதான்!

By Siva
Google Oneindia Tamil News

ஆர்லான்டோ: 1927ம் ஆண்டுக்கு பிறகு 89 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அமெரிக்காவில் தனிநபர் ஒருவரால் பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன் என்பவர் தான் வைத்திருந்த 2 துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் 50 பேர் பலியாகினார், 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஷிகன் கொலை

மிஷிகன் கொலை

1927ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மிஷிகன் மாநிலம் பாத் நகரில் ஆன்ட்ரூ கோஹோ என்பவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிக்கு சென்று குண்டுகளை வீசினார். மேலும் அவர் தனது வாகனத்தில் இருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் 38 குழந்தைகள் உள்பட 44 பேர் பலியாகினர்.

89 ஆண்டுகள்

89 ஆண்டுகள்

அமெரிக்காவில் அவ்வப்போது யாராவது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருகின்றபோதிலும் 89 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தனிநபர் ஒருவரால் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

உமர் குறித்து அவரது தந்தை மிர் சித்திக்கி கூறுகையில், ஒரு முறை மயாமியில் இரண்டு ஆண்கள் முத்தமிடுவதை பார்த்த என் மகனுக்கு கோபம் வந்தது. ஆனால் என் மகன் இப்படி ஒரு செயலை செய்வான் என எதிர்பார்க்கவே இல்லை. பிறரை போன்றே எனக்கும் இது அதிர்ச்சி அளித்துள்ளது என்றார்.

நம்ப முடியாது

நம்ப முடியாது

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மிர் சித்திக்கி தெரிவித்துள்ளார். ஆனால் சித்திக்கி ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களின் ஆதரவாளர் என்பதால் அவரது பேச்சை நம்ப முடியாது என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
Orlando mass shooting is the deadliest single-person mass murder in American history after Michigan incident in 1927 in which a man bombed a school killing 44 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X